பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த எண்ணை அழையுங்கள்!

0
119

 

தீபாவளியை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

அதன்படி நேற்று (நவம்பர்-1) முதல் தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஒரு சில மக்கள் வசதிகளுக்காக மக்கள் தனியார் பேருந்துகளில் செல்வது வழக்கம். ஆனால் இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தனியார் பேருந்துகள் சில மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடுஅரசு எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக “டால் – ஃப்ரீ” நம்பர் ஒன்றை தமிழகஅரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக மக்கள் “1800 425 6151” என்ற டால் – ஃப்ரீ எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K