நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

0
109
Tomorrow is a holiday for schools! Do you know which district?
Tomorrow is a holiday for schools! Do you know which district?

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த புயல் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை முதலே 33 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.குறிப்பாக சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகின்றது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர், ஊத்துக்கோட்டை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K