பாதி விலையில் டிராக்டர்! விவசாயிகளின் கவலையை போக்கிய மத்திய அரசு – விண்ணபிப்பது எப்படி?

0
70
Tractor at half price! Central Government alleviating farmers' worries - how to apply?
Tractor at half price! Central Government alleviating farmers' worries - how to apply?

பாதி விலையில் டிராக்டர்! விவசாயிகளின் கவலையை போக்கிய மத்திய அரசு – விண்ணபிப்பது எப்படி?

மத்திய அரசின் பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் வழங்கபடுகிறது. டிராக்டருக்கான மீதியுள்ள பாதித் தொகையை மத்திய அரசே வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மார்க்கெட்டில் விற்கும் எந்த தயாரிப்பாளரின் டிராக்டர் வாங்கினாலும் இந்த மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா:

மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு பயனளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் வருடம் தலா ரூ.6000 வழங்கி வருகிறது.

இவ்வாறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும், அவர்களது வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் விவசாயத்திற்குத் தேவையான உரம், விதை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மின்சாரங்களுக்கு ஏற்கனவே மானியங்களை அளித்து வருகிறது.

அந்த விவசாயத்துக்கு பிரதான தேவையாக உள்ள டிராக்டர் பெரும்பாலான விவசாயிகளிடம் இருப்பதில்லை. சிலர் சொந்தமாக வைத்துள்ளனர் அதேபோல சிலருக்கு அரசும் சலுகை விலையில் வழங்கியுள்ளது. ஆனால் போதிய நிதி பின்புலம் இல்லாத விவசாயிகள் பலரும் டிராக்டரை சொந்தமாக வாங்காமல் ஒவ்வொரு முறையும் வாடகைக்கு எடுத்து நிலத்தை உழுது வருகின்றனர்.

இப்படியான சிறு குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அவர்கள் டிராக்டர் வாங்க மத்திய அரசு சார்பில் டிராக்டர் யோஜனாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் டிராக்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

மானிய உதவி

பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கும்போது மானிய உதவி வழங்கப்படுகிறது.

பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. டிராக்டருக்கான மீதியுள்ள பாதித் தொகையை மத்திய அரசே வழங்குகிறது.

சந்தையில் விற்கும் எந்த டிராக்டர் வாங்கினாலும் இந்த மானியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்குகின்றன.

தகுதி

18 முதல் 60 வயது வரையிலுள்ள இந்திய குடிமக்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக விவசாய நிலம் இருக்க வேண்டும்.

அதேபோல, இதே காரணத்திற்காக வேறு மானியத் திட்டங்களில் உதவி பெற்றவராக இருக்கக் கூடாது.

விண்ணப்பதாரர் கடந்த ஏழு ஆண்டுகளில் இதேபோல டிராக்டர் எதையும் வாங்கியிருக்கக் கூடாது.

பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பதிவு:

இந்த திட்டத்தில் உதவி பெற அருகிலுள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை, நில பத்திரம், வங்கி விபரங்கள் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு சில மாநிலங்களில் இதற்கென தனி இணையதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகள் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கும் சிரமம் குறைந்துள்ளதால் விவசாயிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.