வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

0
100

வீட்டில் இந்த இடத்தை மட்டும் பூஜை நாட்களில் சுத்தம் செய்து பாருங்கள்! லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்!

லட்சுமி கடாட்சம் தரும் அஞ்சரைப்பெட்டி:நல்ல நாள் பண்டிகை தினம் என்றதுமே நம்முடைய கவனத்தில் முழுவதும் இருப்பது பூஜை அறை தான். இறைவனுக்கு பூஜை எப்படி செய்வது பூஜை அறையை எப்படி சுத்தம் செய்வது. சுவாமிக்கு என்ன நிவேதனம் செய்வது, என்பதை பற்றிய சிந்தனை முழுவதுமாக இருக்கும். அந்த சிந்தனையோடு சேர்த்து வீட்டையும் சுத்தம் செய்யக்கூடிய வேலையை நாம் கவனிக்க வேண்டும். அதாவது வீடு துடைக்கும் வேலை. பண்டிகை நாளுக்கு முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து விடுவோம். இவ்வாறு ஒரு நல்ல நாள் கிழமையில் மற்ற எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தக்கூடிய நாம் நம்முடைய சமையலறையில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள் வந்தால் இப்படி லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய பொருட்களை சமையலறையில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்

சமையலறை:சமையலறையில் இருக்கக்கூடிய உப்பு ஜாடி, புளி ஜாடி, அஞ்சரை பெட்டி, அரிசி அளக்க பயன்படுத்தும் ஆழாக்கு, படி, அரைப்படி, முறம் இவைகளை நல்ல நாள் கிழமையில் சுத்தம் செய்ய வேண்டும். ஜாடியில், அஞ்சரை பெட்டியில் எல்லாம் மளிகை ஜாமான்கள் இருந்தாலும் அதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, இந்த பொருட்களை எல்லாம் சுத்தமாக கழுவி காயவைத்து அதன் பின்பு அதில் பொருட்களை நிரப்பி வைக்க வேண்டும்.

உப்பு ஜாடி:இதே போல சமையல் மேடையை துடைத்து சுத்தம் செய்து, அந்த அடுப்புக்கு மேல் பக்கத்தில் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, பிள்ளையார் சுழி போட்டு, லாபம் என்று எழுத வேண்டும். கொஞ்சமாக மஞ்சளை தண்ணீரில் கரைத்து அதைத் தொட்டு லாபம் என்று எழுதலாம். அப்படி இல்லை என்றால் தனலாபம் என்று கூட எழுதி வைக்கலாம். இப்படி செய்வது சமையல் அறைக்கே ஒரு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சமையலறை என்று இருந்தால் அந்த சமையலறையில் சிறிய உரல், அம்மிக்கல் இருக்க வேண்டும். உரல், அம்மிக்கல்பயன்படுத்துவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை என்றால் இந்த சிறிய உரலுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

அம்மிக்கல்:இதேபோல சமையலறை அலமாரியை ஒவ்வொரு பண்டிகை நாட்களுக்கும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். சமையலறையில் இருக்கும் பாத்திரங்கள் மளிகை ஜாமான்கள் கொட்டி வைத்திருக்கும் டப்பாக்கள் அனைத்தும் எண்ணெய் பிசுக்கோடு அசுத்தமாக இருக்கவே கூடாது. பண்டிகை நாட்களில் பூஜை அறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சமையலறையும் சுத்தமாக இருந்தால் தான் வீட்டில் லட்சுமி கடாட்சத்தில் நிறைந்திருக்கும்.

 

author avatar
Parthipan K