போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

0
102

போலி செய்திகளை தடுக்க டுவிட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உலக அளவில் செய்தி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது. உலகின் எந்தப் பகுதியில் எந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்தாலும் அடுத்த வினாடியே அது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளிவந்துவிடுகிறது. டுவிட்டர், பேஸ்புக் பயனாளிகள் செய்திகளை உடனுக்குடன் புகைப்படத்துடன் வெளியிட்டு வருகின்றனர். உலகின் பிரபல செய்தி நிறுவனங்களைவிட பேஸ்புக் டுவிட்டர் மிக வேகமாக செய்திகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதாக கருதப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் இந்த சமூக வலைதளங்களிலும் சில பொய்யான செய்திகளும் போலியான வதந்திகளும் பரப்பப்படுவதால் சில சமயம் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதும் உண்டு

இதனை தவிர்க்க ஏற்கனவே பேஸ்புக்கில் ஹைட் ரிப்ளைஸ் என்ற வசதியை அறிமுகம் செய்தது. அதன்படி எதிர்மறை கருத்துக்கள், பொய்யான கருத்துக்கள், போலியான கமெண்ட்டுகள், வதந்திகள் ஆகியவற்றை மறையச் செய்யும் வசதி இருப்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதே முறையை தற்போது டுவிட்டரும் பின்பற்ற முடிவு செய்துள்ளது. தற்போது டுவிட்டரிலும் ஹைட் ரிப்ளைஸ் வசதியை கொண்டு வந்துள்ளது. முன்னதாக இந்த வசதியை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கனடா நாடுகளில் சோதனை முறையில் செய்யப்பட்டது. இந்த சோதனை முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது உலகம் முழுவதும் உள்ள டிவிட்டர் பயனாளிகள் இந்த ஹைட் ரிப்ளைஸ் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். பொய்யான செய்திகள், வதந்திகள் என தெரிந்தால் அதை ஹைட் செய்யும் வசதி இருப்பதால் இனிமேல் பொய்ச்செய்திகள் பரவுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

author avatar
CineDesk