ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம்… இன்றும், நாளையும் வங்கிகள் ஸ்டிரைக்…!

0
101
ATM
ATM

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அறிவிற்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்தால் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மத்திய அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனால் வங்கி பணிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விடுமுறைக்குப் பிறகு வாரத்தின் முதல் நாளான இன்று சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரை வங்கி சேவையை நம்பியிருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஸ்டிரைக் அறிவித்துள்ளது மக்களை பெரிதும் பாதிக்க உள்ளது. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பணப்பரிவர்த்தனை, செக் கிளியரன்ஸ், டெபாசிட் போன்ற பணிகள் மட்டுமின்றி ஏ.டி.எம். சேவைகள் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அவற்றின் பணிகள் எப்போதும் போல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk