முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிடுக! சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது இன்று விசாரணை!

0
80

கேரள மாநிலத்தின் எல்லையிலிருக்கின்ற முல்லைப்பெரியாறு ஆணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசும், கேரள அரசும், பகிர்ந்து பராமரிப்பு செய்து வருகின்றன.

கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிடையே நீர் பரிமாற்றம் இந்த ஆணை மூலமாகத்தான் தான் நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் இந்த முல்லைப்பெரியாறிலிருந்து தமிழகத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், தற்சமயம் முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த மத்திய அரசு தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

கேரளாவை சார்ந்த அஜய் ஜோஸ் என்ற நபர் அவர் உட்பட 6 பேர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டவும், வைகை அணையின் கொள்ளளவை அதிகரிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனு நீதிபதி ஏ எம் கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது அந்த சமயத்தில் மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பறா ஆஜரானார். மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் இந்த ரிட் மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது முல்லைபெரியாறு பாதுகாப்புடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இதற்க்கு நடுவே காங்கிரஸ் கட்சியை சார்ந்த இடுக்கி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டின் குரியகோஸ் முல்லைப் பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை ஆய்வு செய்ய சுதந்திரமான விஞ்ஞானிகளை கொண்ட குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து மனு தாக்கல் செய்திருக்கிறார்.