விஜய் ஆண்டனியின் மிரட்டும் கதைக்களம்!! கொலை படத்தின் முழு விமர்சனம் இதோ!!

0
70
Vijay Antony's scary storyline!! Here is the full review of Kill!!
Vijay Antony's scary storyline!! Here is the full review of Kill!!

விஜய் ஆண்டனியின் மிரட்டும் கதைக்களம்!! கொலை படத்தின் முழு விமர்சனம் இதோ!!

திரையுலகில் பாடகராகவும், இசை அமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி ஆவார். இவர் தமிழில் பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன்,காளி, அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அந்த வரிசையில் இன்று இவரின் நடிப்பில் வெளியான படம் தான் கொலை. இப்படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கி உள்ளார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக திரில்லர் என்ற திரைப்படத்தை இயக்கிய பிறகு தற்போது தான் இந்த கொலை படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பட நடிகர்களும் நடித்துள்ளனர். எனவே, இப்படம் குறித்த விமர்சனங்களை இங்கு பார்ப்போம்.

இப்படத்திற்கு இரண்டு ட்ரெய்லர்கள் வெளியான நிலையில், படம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்டது. அதற்கேற்றவாறு படத்தில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை விஜய் ஆண்டனி வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும், இப்படத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நடிகரும் அவரவர் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுப்பது போன்று நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு கொலையை ஹீரோ எவ்வாறு தேடி கண்டுப்பிடிக்கிறார் என்பதை மையமாக கொண்டுள்ளது.

இந்த கதையில், மாடலாக இருக்கும் மீனாட்சி சவுத்ரி மர்மமான முறையில் தனது உயிரை இழக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கக்கூடிய அதிகாரியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

இவருக்கு உதவி செய்பவராக வரக்கூடிய ஓய்வு பெற்ற அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த கொலையை அவரது வழியில் வித்தியாசமான முறையில் எப்படி கண்டறிவார், கொலையாளியை கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் கொலை படத்தின் முழு கதையாகும்.

படத்தின் அனைத்து பாகங்களும் பார்ப்போரை ஈர்க்கும் விதமாக விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் நிறைந்திருக்கக்கூடிய இப்படத்தில் விஜய் ஆண்டனியின் உடல் மொழியில் மற்றும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுமே தன்னுடைய பாகங்களில் அசத்தலாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk