திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தலைமை!

0
126
#image_title

திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தலைமை!

11புதுமுகங்கள் கொண்ட 21தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திமுக.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி காங்கிரஸ், மக்கள் நீதிமையம், மார்சிஸட், இந்திய கம்யூனிஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ், கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி,இந்திய முஸிலீம் லிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது.

தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 21தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார் திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், 21வேட்பாளர்களில் 11வேட்பாளர்கள் புதுமுக வேட்பாளர்களை அறிவித்தது திமுக கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இங்கு காண்போம், வடசென்னை – கலாநிதி வீராசாமி, தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை-தயாநிதிமாறன், பெரும்பத்தூர் – டி. ஆர். பாலு, தூத்துக்குடி- கனிமொழி, நீலகிரி – ஆ. ராசா, அரக்கோணம்- ஜெகத்ரட்சகன், காஞ்சிபுரம்- செல்வம், வேலூர்- கதிர்ஆனந்த், தருமபரி- மணி, சேலம்- செல்வகணபதி, கள்ளக்குறிச்சி- மலையரசன், திருவண்ணாமலை – அண்ணாதுரை, ஆரணி- தரணிவேந்தன், பெரம்பலூர்- அருண்நேரு, கோவை- கணபதிராஜ்குமார், தஞ்சை- முரசொலி, தேனி- தங்கதமிழ்ச்செல்வன், தென்காசி – ராணி குமார், பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது திமுக கட்சி தலைமை.

author avatar
Savitha