சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

0
93

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்

நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை நாம் சமையலறையில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து சர்க்கரை நோயின் அளவினை எவ்வாறு குறைப்பது என்று காண்போம்.

செய்முறைகள்:

நாம் சமையலறை பயன்படுத்தக்கூடிய வெந்தயம் இரவு தூங்க செல்வதற்கு முன் அரை லிட்டர் தண்ணீரில் 2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் இதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடித்து வருவதன் மூலமாக சர்க்கரையின் அளவு குறைகிறது.

ஒரு லிட்டர் தண்ணீரில் 2 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து அரை மணி நேரம் கழித்து இதனை வடிகட்டி குடித்த வருவதன் மூலமாகவும் சர்க்கரையின் அளவு குறைகிறது. முளைகட்டிய வெந்தயத்தை காலையில் சாப்பிட்டு வருவதன் மூலமாகவும் சர்க்கரையின் அளவானது குறைகிறது.

வெண்டைக்காய்:

இதில் உள்ள வழுவழுப்புத் தன்மை ஆனது சர்க்கரை நோயின் அளவை குறைப்பதற்கு பயன்படுகிறது. இரவு உறங்குவதற்கு முன் ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று வண்டைக்காய்களை நான்கு துண்டுகளாக வெட்டி மறுநாள் காலையில் வடிகட்டி குடித்து வருவதன் மூலமாக சர்க்கரை நோய் அளவானது குறைகிறது. சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலமாகவும் சர்க்கரையின் அளவானது குறைகிறது இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

 

author avatar
Parthipan K