உதட்டை இயற்கையாகவே சிவப்பாக்க வேண்டுமா! இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

0
126
#image_title

உதட்டை இயற்கையாகவே சிவப்பாக்க வேண்டுமா! இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

கருமையாக இருக்கும் உங்கள் உதடுகளை அப்படியே இயற்கையாக சில பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சிவப்பாக மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் அனைவரும் தங்களின் உதடுகளை சிவப்பாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அதற்காக பல வகையான கிரீம், எண்ணெய், பேஸ்ட் போன்ற சாதனங்களை கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அது தவறான செயல். ஏன் என்றால் என்றாவது ஒருநாள் உதடுகளுக்கு தீமைகளை அளிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இயற்கையான முறையில் உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு நாம் இந்த பதிவில் சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உதடுகளை இயற்கையாக சிவப்பாக்கும் வழிகள்…

* உதடுகளை இயற்கையாக சிவப்பாக மாற்றுவதற்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் இதை உதடுகளில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

* இயற்கையாகவே உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு பீட்ரூட் சாறு எடுத்துக் கொள்ளை வேண்டும். இந்த பீட்ரூட் சாற்றை தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் உதடுகளில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் கருமையான உதடுகள் சிவப்பாக மாறும்.

* இயற்கையாக கருமையான உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு மாதுளம்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள சாறு எடுத்து தினமும் இரவு தூங்கச் ஞெல்வதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்துவிட்டால் உதடு கருமை நிறத்தில் இருந்து சிவப்பாக மாறும்.

* ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சர்க்கரை மற்றும் சிறிதளவு நெய் எடுத்துக் கொள்ளை வேண்டும். இதை நன்கு கலந்து விட்டு பின்னர் உங்கள் உதடுகளில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

* அதே போல எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து ஒரு பாதியை எடுத்து சர்க்கரையில் தொட்டு உதடுகளில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் உதடுகள் சிவப்பாக மாறும்.