என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!!

0
80
#image_title

என்ன சொல்கிறது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்..!!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிதாக 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் மறுஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாற்றியமைக்கப்பட்ட இந்த 3 மசோதாக்களும் இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. முந்தைய மசோதாக்களைத் திரும்பப் பெறுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள்:-

திருத்தப்பட்ட பாரதிய நியாய (இரண்டாம்) சன்ஹிதா மசோதா நடைமுறையில் உள்ள சட்டத்துடன் இரண்டு புதிய பிரிவுகளைச் சேர்க்கிறது.

அதன்படி திருத்தப்பட்ட பாரதிய நியாய (இரண்டாம்) சன்ஹிதா மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 86,

திருமண உறவில் ஒரு பெண்ணுக்கு அவர் கணவர் அல்லது அவரது உறவுக்காரர்களால் ஏற்படும் கொடுமை, துன்புறுத்தலை பிரிவு 86 வரையறுக்கிறது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அந்த சட்டம் கூறுகிறது.

2)திருத்தப்பட்ட பாரதிய நியாய (இரண்டாம்) சன்ஹிதா மசோதாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 73,

பாலியல் பலாத்கார கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பொழுது அந்த பெண்ணின் அடையாளத்தை நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் அச்சிடுவது, செய்தியாக வெளியிட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

3)ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழு, மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த இடம், மொழி, தனிப்பட்ட நம்பிக்கை உள்ளிட்டவைகளால் கொலை குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை அல்லது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று நடைமுறையில் உள்ள சட்டம் சொல்கிறது. ஆனால் திருத்தப்பட்ட பாரதிய நியாய (இரண்டாம்) சன்ஹிதா மசோதாவில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற குறிப்பு மட்டும் தவிர்க்கப்பட்டு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த பாரதீய சக்ஷ்யா (இரண்டாவது) சன்ஹிதா மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாம்) சன்ஹிதா ஆகிய இரு சட்டங்களும் இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை மாற்றி அமைகின்றன என்று அமித்ஷா தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா தாக்கல் செய்திருக்கும் மூன்று குற்றவியல் திருத்தச் சட்ட மசோதாக்கள் மீது வரும் வியாழன் அன்று அவையில் விவாதம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.