வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!!

0
64
#image_title

வெள்ளத்தில் சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கா..? முழு விளக்கம் இதோ..!!

மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த கார்களுக்கு இன்சூரன்ஸ் கவர் செய்ய முடியுமா என்ற கேள்வி வாகன ஓட்டிகளிடம் எழுந்து இருக்கிறது.

முதலில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை இயக்க கூடாது. இதனால் இன்ஜின் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்ஜின் ப்ரொட்டக்சன் இருந்தால் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கிய காரை ஸ்டார்ட் செய்தாலும் இன்சூரன்ஸ் கவர் ஆகும். ஒருவேளை இன்சூரன்ஸில் இன்ஜின் ப்ரொட்டக்சன் இல்லை என்றால் காரை இயக்குவதை தவிர்க்க வேண்டும்.

கார் இன்ஜின் பழுதாகி விட்டால் அதற்கு ஆகக் கூடிய செலவு அதிகமாக இருக்கும். இதனால் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாது.

நீங்கள் வாகனம் வாங்கும் போதே RTI எடுத்திருக்க வேண்டும். இவை பேரிடர் காலத்தில் நமக்கு கைகொடுக்கும். அதேபோல் கம்பர்சென்சிவ் கவரேஜ் (Comprehensive Coverage) வாங்கி இருந்தால் அவை காரை ரிப்பேர் செய்வதற்கு பயன்படும்.

அதேபோல் RTI எடுக்கும் பொழுது வாகன இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் உங்கள் வாகனம் பழுது பார்க்க முடியாத அளவிற்கு மொத்தமாக சேதமாகி இருந்தாலும் கார் வாங்கும் பொழுது நீங்கள் செலுத்திய இன்வைஸ் மதிப்பு உங்களுக்கு க்ளைம் ஆகும். அதாவது உங்கள் காருக்கான முழு தொகை உங்களுக்கு கிடைக்கும்.

வெள்ளத்தில் சிக்கிய கார்கள் D, C, B, A என்று 4 வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மழை வெள்ள நீர் கார் சக்கரத்தில் பாதி அளவு மட்டும் வந்திருக்கு என்றால் அதை D கேட்டகிரி என்று சொல்வார்கள். மழை வெள்ள நீர் காரின் உள் தரை வரை வந்திருக்கு என்றால் அதை C கேட்டகிரி என்று சொல்வார்கள். மழை நீர் உங்கள் காரின் சீட் வரை வந்திருந்தால் அதை B கேட்டகிரி என்று சொல்வார்கள். கார் மழை வெள்ளத்தில் மூழ்கினால் அதை A கேட்டகிரி என்று சொல்வார்கள்.

இதில் D மற்றும் C கேட்டகிரி காரை சுலமபாக சரி செய்ய முடியும். இதற்கு ஆகிற செலவை இன்சூரன்ஸ் மூலம் க்ளைம் செய்து கொள்ள முடியும். ஆனால் உங்கள் கார் B மற்றும் A வகையில் இருந்தால் அதை டோட்டல் லாஸ் என்று சொல்வார்கள். இதை சரி செய்ய இயலாது. இந்த கேட்டகிரி காருக்கு இன்சூரன்ஸ் தொகை முழுமையாக வழங்கப்படும். இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் வாகனம் வாங்கும் போதே RTI எடுத்திருக்க வேண்டும். இது வாகனம் வாங்கிய முதல் 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின் ரினீவல் செய்திருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் கவர் செய்ய முடியும்.