பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி

0
124
#image_title

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி

தற்போது 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சிறப்பு முயற்சிகள் எடுத்துள்ளது.

மாணவர்களுக்கு காலை உணவு, உதவித்தொகை போன்றவற்றை இந்த அரசு செய்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்ற முக்கிய கட்டத்தில் உள்ளனர். இந்த விசயத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கு இருப்பதில்லை.

மாணவர்கள் 11ஆம் வகுப்பில் தேர்வு செய்யும் பாடங்களை பொறுத்துதான் அவர்கள் கல்லூரியில் படிக்கும் துறைகளை தேர்வு செய்ய முடியும். அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு இதற்கென அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விபரங்களை அதிகாரபூர்வமான இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

author avatar
CineDesk