புதிதாக எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த முதல்வர்!

0
60

தமிழ்நாட்டில் நோய் தொடரின் இரண்டாவது அலை பரவல் காரணமாக, முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து நியாய விலை கடை அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்தத் திட்டம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளன்றுதான் செயல் படுத்தப் படுவதாக இருந்தது. ஆனால் தற்போது நோய்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கருத்தில் வைத்து இப்பொழுது அந்த நான்கு ஆயிரம் ரூபாய் 2000 ரூபாய் முதல் தவணையாக வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தற்சமயம் நியாய விலை கடைகளில் அந்த 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்ட நிவாரணம் சென்று சேரும் விதமாக தமிழக அரசு தற்சமயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

இந்த நோய் தொற்றின் காரணமாக, பொதுமக்களுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கின்ற சிரமங்களை குறைக்கும் விதமாக நோய்த்தொற்று சமயத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதற்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்குவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அந்த விதத்தில் 4 ஆயிரத்து 153.39 கோடி ரூபாய் செலவில் மே மாதத்தில் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்குவதற்கு முதல்வர் ஆணையிட்டிருக்கிறார்.

இதனையடுத்து தற்சமயம் நடைமுறைக்கு வந்திருக்கின்ற 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரிசி அட்டைதாரர்களுக்கும் இந்த நிவாரணத் தொகையை வழங்கும் விதத்தில் 42 99 கோடி செலவில் மே மாதத்தில் 2000 ரூபாய் நிவாரணத் தொகையை பழகுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.