உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!

0
158
#image_title

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் வரும் 1 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, ஒரு லட்சம் பேருக்குமேல் பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்களுடன் தேரோடும் ராஜா வீதிகளில் ஆய்வு.

உலகப் பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோயிலில்
18 நாள் சித்திரை திருவிழா 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான பெரிய கோயில் தேரோட்டம் வரும் மே 1ம் தேதி காலை நடைபெற உள்ளது தேரோட்ட விழா ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்புகள் குறித்தும், மாநகராட்சி, மின்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் , தேரோடும் ராஜா வீதிகளான தெற்கு வீதி, வடக்கு வீதி, கீழராஜ வீதி, மேலவீதி, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.

அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொண்டுவருவதாகவும், வரும் மே 1 ம் தேதி நடைபெறவுள்ள தேரோட்த்தில் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்ப்பார்கள் என்பதால் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

author avatar
Savitha