டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் இருந்து மாற்றம்! சவுரவ் கங்குலி உறுதி!

0
135

2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா வைத்திருந்தது. இந்த நிலையில் சவுரவ் கங்குலி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது அவர், இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்படுவதாக கூறியுள்ளார்.

தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கணிசமாக குறைந்தபோதிலும், இந்தியாவில் தினசரி கொரோனா பதிவு ஆயிரக்கணக்கில் எட்டியுள்ளதால் இந்தியாவில் நடத்தினாலும் மற்ற அணிகள் ஒத்துழைக்காது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021ஆம் ஆண்டின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டுள்ளது. உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் ஆகியவை இரண்டும் ஒரே இடத்தில் நடந்தால் தொடரை நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிசிசிஐ-யின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
‘உலகக் கோப்பையை நடத்துவதற்கான விவரங்களை முடிவு செய்வதற்கு இன்று கடைசி நாள் என்று ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பிசிசிஐ குழுவுடன் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவில் டி20 உலகக்கோப்பையை இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.

அடுத்த 2-3 மாதங்களில் கொரோனாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க இயலாது என்ற காரணத்தாலும் இந்தியாவில் கொரோனாவின் அச்சுறுத்தல் முழுவதுமாக குறையாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Jayachithra