ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி

0
188
#image_title
ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி
பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஏற்காடு பிரதான சாலையில் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி ஏப்ரல் 24 முதல் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு சேலம் கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியாக இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
இதர இலகு ரக மற்றும் கன ரக வாகனங்கள் மாற்று வழியாக அயோத்தியாப்பட்டணம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலையினை ஏற்காடு செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இக்குறிப்பிட்ட நாள்களில் குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.