கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை

0
123
#image_title
கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி! அண்ணாமலை .
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே அம்மாநிலத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள கட்சியாக கருதப்படும் அதிமுக அங்குள்ள புலிகேசி தொகுதியில் தனது வேட்பாளரை களம் இறங்கிய நிலையில், பாஜக மேலிடம் கேட்டு கொண்டதற்காக தனது அதிகாரபூர்வ வேட்பாளரை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இன்று தமிழக பாஜக தலைவரும், கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அண்ணாமலை பெங்களுரில் செய்திகளை சந்தித்து பேசினார் அப்போது, வரும் ஏப்ரல் 25,26-ல் மத்திய அமைச்சர்கள் பலர் தேர்தல் பரப்புரைக்காக கர்நாடகா வர உள்ளனர்.
கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். கர்நாடக பாஜக அனைவருக்குமான கட்சி. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜக ஆட்சியை பார்த்துள்ளதால், அவர் பாஜகவை பார்க்கும் விதம் வேறுவிதமாக உள்ளது. அவர்கள் பாஜகவை வித்தியாசமாக பார்க்கின்றனர். எனவே கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவை ஆதரிக்க தயாரிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் நாங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறோம். திமுக செய்து வரும் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்பதே எங்கள் கடமை. என்று தெரிவித்தார்.
இதனிடையே கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக போட்டி போட்டு கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.