சியாட்டிக்கா நரம்பு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு! வெறும் 2 பொருள் தான்!

0
258

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா.

இந்த நரம்பு பிரச்சனையானது எப்பொழுது வரும் என்றால் 45 வயது தாண்டிய ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, வரும்.

45 வயது பையனுக்கு பின் மூட்டுகளில் உள்ள ஜவ்வு விலகுவதாலும் மூட்டுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் இந்த நரம்பானது பின்னிக்கொள்ளும். இதனால் உங்களுக்கு வலி ஏற்படும்.

அதை இரண்டு பொருள் வைத்து எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்!

தேவையான பொருட்கள்:

1. மஞ்சள்
2. வெள்ளை எருக்கன் இலை

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
2. அதில் 2 டீஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் போடவும்.
3. 5 வெள்ளை எருக்கன் இலைகளை கழுவி விட்டு அந்த தண்ணீரில் போடவும்.
4. இப்பொழுது இதை நன்றாக கொதிக்க விடவும்.
5. எருக்கன் இலையின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு கால்களில் வலி உள்ள இடத்தில் கட்டி ஒரு காட்டன் துணி சுற்றிக் கொள்ளவும்.
6. அப்பொழுது இளஞ்சூட்டில் இருக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக கால்கள் மீது ஊற்றவும்.
7. இதை இரவு நேரங்களில் செய்து வரவும்.

இப்படி தொடர்ந்து ஒரு வாரம் செய்து வரும் பொழுது உங்களுக்கு சியாட்டிக்கா என்னும் நரம்பு இழுத்தல் பிரச்சனை இருந்து முழு தீர்வு கிடைக்கும்.

author avatar
Kowsalya