தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவுங்க! முடி காடு போல வளரும்!

0
176

எல்லோருக்கும் முடி வளர வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நாம் உண்ணும் உணவுகள் நம் உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் நம் மொழியை பாடாய்படுத்துகின்றன. தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து நாம் இரவில் தடவி வரும் பொழுது நிச்சயமாக உங்கள் முடி வெள்ளை முடி இன்றி கருமையாக மாறி மூடி உதிர்வையும் தடுத்து காடு போல் வளரச் செய்யும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. சடா மஞ்சள்

2. வெட்டி வேர்

3. பட்டை

4. மருதாணி இலை

5. கருவேப்பிலை

6. தேங்காய் எண்ணெ

 

 

செய்முறை:

 

1. முதலில் மருதாணி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.

2. பின் கருவேப்பிலையை அரைபிடி கையளவு எடுத்துக் கொள்ளவும்.

3. இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதையும் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

4. இப்பொழுது அடுப்பில் வானிலை சட்டியை வைத்து அரை லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயில் ஊற்றிக் கொள்ளவும்.

5. அதில் அரைத்து வைத்த மருதாணி மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

6. வெட்டிவேரை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

7. ஒரு துண்டு பட்டையை சேர்த்துக் கொள்ளவும். பட்டை எதற்கு என்றால் தலையில் உள்ள கிருமிகளை பொடுகுகளை தடுப்பதற்காக.

8. சடா மஞ்சள் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி எடுத்துக் கொள்ளுங்கள். நான்கைந்து கிழங்குகளை எடுத்து எண்ணெயுடன் சேர்க்கவும்.

9. அனைத்தையும் சேர்த்து மிதமான சூட்டில் எண்ணெயை கொதிக்க விடவும்.

10. சலசலப்பு அடங்கும் வரை எண்ணையை கொதிக்க விடவும்.

11. பெண் ஆறவைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

 

இப்பொழுது இந்த எண்ணையை கண்ணாடி பாட்டில்களை சேமித்து வைத்துக் கொள்ளவும், தூங்கப்போகும் முன் சிறிதளவு எண்ணெய் எடுத்து தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்துவிட்டு காலையில் எழுந்து கூட தலைக்கு குளித்துக் கொள்ளலாம். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரும்பொழுது உங்களது முடி நன்கு கருமையாக வளரும். வெள்ளை முடி இருக்காது. நரை இருக்காது. பொடுகு தொல்லை இருக்காது.

author avatar
Kowsalya