வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!!

0
186
#image_title

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!!

கடந்த மாதம் தமிழக்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 அன்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது.

இந்த புயலால் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் இது குறித்து அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து மக்கள் நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கனை டிசம்பர் 14 ஆம் தேதியில் இருந்து ரேசன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிவாரணத் தொகை சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் செங்கல்பட்டு,
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் உள்ள மக்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

தற்பொழுது இந்த 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையை பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிருப்பதால் அனைத்து ரேசன் கடைகளிலும் டோக்கன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில் டோக்கன் பெற நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்த பெரும்பாலான மக்களின் பெயர் லிஸ்டில் இடம் பெறாததால் ஆத்திரமடைந்து ரேசன் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை அனைத்து ரேசன் அட்டைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதை நம்பி நிவாரண டோக்கன் வாங்க நீண்ட நேரம் கால்கடுக்க நின்ற மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. அரசு இவ்வாறு குளறுபடி செய்தால் மக்கள் கொந்தளிக்கத் தான் செய்வார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும், மீட்பு பணிகளிலும் தான் கோட்டை விடீர்கள் என்றால் நிவாரணத் தொகை வழங்குவதிலுமா கோட்டை விடுவீர்கள் என்று திமுக அரசை பொதுமக்கள் வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.