நவ. 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை-அன்பில் மகேஷ்

0
84

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மேலும், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் மாணவர்கள் யாரையும் கட்டாயமாக பள்ளிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், வீடு தேடி கல்வித் திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், 1.5 லட்சம் பேர் பதிவு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.