படர் தாமரைக்கு நிரந்தர தீர்வு தரும் 2 இலை கொண்ட வீட்டு வைத்தியம்!

0
108
#image_title

படர் தாமரைக்கு நிரந்தர தீர்வு தரும் 2 இலை கொண்ட வீட்டு வைத்தியம்!

தோலில் பூஞ்சை, தொற்று கிருமிகள் தேங்கினால் அவை நாளடைவில் படர்தாமரையாக உருவாகி விடும். இந்த படர்தாமரை பாதிப்பை எளிதில் குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)குப்பைமேனி
2)வேப்பிலை
3)மஞ்சள்
4)பூண்டு
5)தயிர்

செய்முறை:-

குப்பைமேனி இலை, வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அடுத்து இந்த விழுதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

அதன் பின்னர் ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்து அதில் சேர்த்துக் கொள்ளவும். இதை அனைத்தையும் நன்கு கலந்த பின்னர் சிறிது தயிர் சேர்த்து கலக்கி படர்தாமரை மீது பற்று போல் போடவும். இதை ஒரு இரவு வரை விட்டு மறுநாள் காலையில் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் படர்தாமரை மீது இருக்கும் பூஞ்சை கிருமிகள் அனைத்தும் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல்
2)மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கலக்கி படர்தாமரை உள்ள இடத்தில் பூசினால் அவை விரைவில் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை
2)மிளகு
3)மஞ்சள்

ஒரு முழு வெற்றிலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும். அடுத்து 2 அல்லது 3 மிளகை போட்டு இடித்து வெற்றிலை சாற்றில் கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை படர்தாமரை மீது பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.