தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
41
#image_title

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகினற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியத்துடன் போனஸ் வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்த ஆணையை முதல்வர் ஸ்டலின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.

கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 10% தீபாவளி போனஸாக வழங்கப்பட்டதை போல் இந்த ஆண்டும் அதே 10% போனஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை போனஸ் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து போக்குவரத்து துறை காவலர்கள், ஊழியர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை மற்றும் மத்திய அரசு சங்க பணியாளர்களுக்கு போனஸை கருணைத் தொகையாக வழங்க அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.

இவ்வாறு அந்தந்த துறை அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது டாஸ்மாக் ஊழியர்களுக்கான போனஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. டாஸ்மாக் மூலம் நாள் ஒன்றுக்கு 500 கோடி வரை லாபம் பார்த்து வரும் தமிழக அரசு டாஸ்மாக் ஊழியரக்ளுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்குவாத அறிவித்து இருக்கின்றது.

கடந்த ஆண்டு 10% என்று வழங்கப்பட்ட தீபாவளி போனஸை 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வந்த நிலையில் தற்பொழுது போனஸ் குறித்த ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது.