தமிழ் நாட்டிலே சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப் பட்டு இருக்கின்றன. ஆனாலும் இன்னும் அந்த 20 தொகுதிகளில் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் அந்த 20 தொகுதிகளும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ராஜபாளையம் சட்டசபை தொகுதி பாஜகவிற்கா அல்லது அதிமுகவிற்கா என கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், ராஜபாளையம் பகுதியில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை ஒவ்வொரு வீட்டிலும் சுவரின் வரைந்து வைத்து வருகிறார்கள் அந்த கட்சி நிர்வாகிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிமுக சார்பாக ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிட இருக்கிறார் என்று தெரிவித்து அந்த கட்சியின் பிரமுகர்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை கௌதமி அந்தப் பகுதியில் தங்கி தேர்தல் பணிகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில், அவர் வீடு வீடாக சென்று தன்னுடைய தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் அதேபோல அந்தக் கட்சியின் சார்பாகவும் அந்த பகுதியில் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.அதிமுக சார்பாக இறுதி வேட்பாளர் பட்டியல் இதுவரையில் வெளியிடப்படவில்லை இந்த நிலையில், ராஜபாளையம் தொகுதியில் இருக்கின்ற கிராமங்களில் ஒவ்வொரு வீடாக அதிமுகவின் தொண்டர்கள் சென்று அந்த வீடுகளின் சுவர்களில் இரட்டை இலை சின்னத்தை வரைந்து உற்சாகமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள் இதன் காரணமாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பரபரப்பு மற்றும் குழப்பம் போன்றவை நிகழ்ந்து வருகிறது.
ஆனால் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராமநாதபுரத்தில் தான் போட்டியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் என்னதான் பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தாலும் அவருக்கு சொந்த ஊரில் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக, அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த ராஜபாளையம் தொகுதி விவகாரம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் தற்சமயம் ஒரு மிகப்பெரிய பயத்தை கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் இதனால் எதிர்கட்சியான திமுக குஷியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.