காய்ச்சல் ஜலதோஷத்தை விரட்டி அடிக்கும் கசாயம்!! இனி மருந்து மாத்திரை தேவையே இருக்காது!!

0
129
#image_title

காய்ச்சல் ஜலதோஷத்தை விரட்டி அடிக்கும் கசாயம்!! இனி மருந்து மாத்திரை தேவையே இருக்காது!!

நம்மில் சிலருக்கு காய்ச்சலும் ஜலதோஷமும் ஒருசேர அதாவது ஒன்றாக வந்து நம் உடலை பலவீனமடையச் செய்யும். அது மட்டுமில்லாமல் இது நமக்கு பல வேதனைகளை கொடுக்கும்.

அவ்வாறு வேதனைகளை கொடுக்கின்ற காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் சரி செய்ய இந்த பதிவில் கூறி இருக்கும் கஷாயத்தை உங்கள் வீட்டில் செய்து குடித்து பாருங்கள். பிறகு காய்ச்சல் ஜலதோஷம் இரண்டுமே உங்களுக்கு இருக்காது.

இந்த கஷாயத்தை செய்ய தேவையான பொருட்கள்

* கற்பூரவள்ளி இலைகள் – 5

* அரசமரத்து இலைகள் (கொழுந்து இலைகள்) – 3

* துளசி இலைகள் – 5

* மிளகு – 7

* ஏலக்காய் – 2

* அதிமதுர குச்சி (தட்டி எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை

முதலில் அரை டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். அதனுடன் எடுத்து வைத்துள்ள துளசி இலைகள், அரசமரத்து கொழுந்து இலைகள், கற்பூரவள்ளி இலைகள் மூன்றையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு மிளகு, ஏலக்காய், அதிமதுர குச்சி மூன்றையும் சேர்த்து இடித்துக் அதை அந்த கஷாயத்துடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அரை டம்ளர் தண்ணீர் 50 மிலி அளவு ஆகும் வரை சூடு செய்து இறக்கிக் கொள்ளவும்.

இந்த கஷாயத்தை பெரியவர்கள் அப்படியே குடிக்கலாம். சிறிய வயது உள்ளவர்கள் இந்த கஷாயத்துடன் தேன் கலந்துதான் குடிக்க வேண்டும்.

ஆறு மாத குழந்தைகளுக்கு கூட இந்த கஷாயத்தை கொடுக்கலாம். ஆறு மாத குழந்தைகளுக்கு சங்கில் பாதி அளவு இந்த கஷாயத்தையும் பாதி அளவு தேனையும் கலந்து கொடுக்கலாம்.