கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர்!!

0
45
#image_title

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர்

இயக்குனர் சீனு ராமசாமி 2007 ஆம் ஆண்டு நடிகர் பரத், நடிகை சந்தியா அவர்களை வைத்து கூடல்நகர் என்னும் படத்தை இயக்கினார். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய இரண்டாவது படம் “தென்மேற்கு பருவக்காற்று” 2010ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய முதல் தேசிய விருதை பெற்றார்.

அதன் பிறகு இவர் இயக்கிய நீர்ப்பறவை; தர்மதுரை; கண்ணே கலைமானே; மாமனிதன் போன்ற அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எளிய கிராமத்து மனிதர்களை வைத்து யதார்த்தமாக படங்களை இயங்கும் இயக்குனர் என்ற பெருமையெ இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் தன் வசம் வைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி அவர்கள் கவிதைத் தொகுப்பு, சிறுகதைகள், நாவல் என பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் தான் எழுதிய கவிதை புத்தகத்துடன் சென்று தேனி மாவட்டம் ஆட்சியாளரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார்.

சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து,

ஏகன் கதாநாயகனாக அறிமுகமாகும் “கோழிப்பண்ணை செல்லதுரை” படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார்.

இத்த படத்திற்கான படப்பிடிப்பு தளங்களை பார்வையிட வந்த இயக்குனர் சீனு ராமசாமி மரியாதை நிமித்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்தார். அத்துடன் தான் எழுதிய ‘புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை’ என்னும் கவிதை நூலை நினைவு பரிசாக வழங்கினார். அவருக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

 

 

author avatar
Parthipan K