மாதம் 140000 ரூபாய் வரை சம்பளம்!!! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு இதோ!!!

மாதம் 140000 ரூபாய் வரை சம்பளம்!!! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு இதோ!!!

மாதம் 140000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்ன வேலை என்ன தகுதி எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை பி.டி.எல் என்று அழைக்கப்படும் பாரத் டைனமிக்கல் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பாரத் டைனமிக்கல் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்குகின்றது. பாரத் டைனமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த நிறுவனத்தில் தற்பொழுது காலியாக இருக்கும் 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் செப்டம்பர் 21ம் தேதி அல்லது அதற்கு முன்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்பு பற்றிய மற்ற விவரங்கள்…

நிறுவனத்தின் பெயர் : பாரத் டைனமிக்கல் லிமிடெட்

பணியின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் வெல்ஃபேர் ஆபிசர் மற்றும் ஜே. எம் பப்ளிக் ரிலேசன்

மெத்த காலிப்பணியிடங்கள் : 45

கல்வித் தகுதி : MS Physics, MS Applied Physics, Bachelor Degree In Engineering அல்லது Bachelor degree in Technology

மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கான வயது வரம்பு : குறைந்தபட்சம் 27 வயதாகவும் அதிகபட்சம் 32 வயதாகவும் இருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

மேனேஜ்மென்ட் டிரெய்னி – 40000 ரூபாய் முதல் 140000 ரூபாய் வரை

வெல்ஃபேர் ஆபிசர் மற்றும் ஜே.எம் : 30000 ரூபாய் முதல் 120000 வரை

தேர்வு செய்யும் முறை :

மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் முறையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் செப்டம்பர் 21ம் தேதிக்குள் https://bdl-india.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.