ஒரு ஸ்பூன் போதும்!! ஒரு வாரத்தில் தொடைக்கருமை இருந்த இடம் தெரியாமல் போகும்!!

0
62

ஒரு ஸ்பூன் போதும்!! ஒரு வாரத்தில் தொடைக்கருமை இருந்த இடம் தெரியாமல் போகும்!!

இது ஒன்று போதும் தொடை கருமை புண் சிவந்த போதல் சரியாகிவிடும்.முகத்தைப் பராமரிக்க முடிந்தளவு நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் உள் தொடையில் இருக்கும் கருப்பை நீக்க முயற்சி செய்திருக்கிறோமா? ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டால் கருமை நீங்கி விடும். எப்படி என்று பார்க்கலாம்?

பெரும்பாலும் கழுத்து, அக்குள் பகுதியில் படரும் கருப்பு சரும நிறத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும். மாநிறத்தில் இருப்பவர்களை விட சற்று வெள்ளை நிறமாக இருப்பவர்களுக்கு இது அழகை குறைப்பதாக காட்டும்.

இவை வெளிப்புறத்தில் இருக்கும் பிரச்சனை. ஆனால் உள் தொடையில் உண்டாகும் கருமை நிறத்தை சட்டென்று பார்ப்பதில்லை என்பதோடு அதைக் கண்டாலும் பெரிதுபடுத்துவதும் இல்லை. அதைப் பராமரிப்பதும் இல்லை. சற்று தீவிரமாகும் போது அந்த இடத்தில் சொரசொரப்பையும் உண்டாக்கி எரிச்சலை ஏற்படுத்தும்.

தொடைகள் இரண்டும் உரசும் போது சரும உரசல் ஏற்படும் போது அந்த இடத்தில் கருமை படர்வது வழக்கம். உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவருமே இந்த பிரச்சனைக்கு உள்ளாவார்கள். இதில் வயது வித்தியாசம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரும நிறத்துக்கு ஏற்றாற் போல் தொடையின் நிறமும் இருக்க வேண்டுமானால் முறையான பராமரிப்பு இருந்தால் போதும். காற்றோட்டமில்லாத அந்தரங்கமான இடங்களுக்கும் பராமரிப்பு தேவை. இது அழகுக்காக வேண்டி அல்ல, ஆரோக்கியத்துக்காகவும் பராமரிக்க வேண்டும்.

இறுக்கமான ஆடைகளை அணியும் போதும் குறிப்பாக பருமனான ஜீன்ஸ் அணியும் பெண்களின் உள் தொடை அதிக கருமை அடைய வாய்ப்புண்டு. இதை எப்படி நீக்குவது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சை பழம் சாறு-1 டேபிள் ஸ்பூன்

தேன்-1 டேபிள்ஸ்பூன்

கற்றாழை ஜெல் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1: முதலில் ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்கவும். இது அதில் உள்ள அரிப்பு அலர்ஜி போன்ற நோய்களை சரிப்படுத்தும்.

2: பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்த்தால் எரிச்சல் ஏற்படும் ஆனால் அங்கு உள்ள புண் வேகமாக குணமாகிவிடும் மற்றும் கிருமி நாசினியாக செயல்படும்.

3: பின்பு 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்க்கவும். இதை மூன்றும் சேர்த்த பெண்மணி நன்றாக கலந்து விடவும்.

4: பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதனை எடுத்து நம் தொடை பகுதி மற்றும் அரிப்பு போன்ற இடங்களில் நன்றாக தடவிக் கொள்ளவும். இது இரவு தூங்கும் முன்பு இதனை தடவ வேண்டும். ஒரு 20-30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

ஒரு வாரத்திற்கு தினமும் செய்து வந்தால் வெறும் மூன்று நாட்களில் நல்ல ஒரு மாற்றம் தெரியும்.

இதுபோன்று நாம் செய்து வந்தால் தொடைப்பகுதியில் உள்ள கருமை, அரிப்பு, எரிச்சல் போன்ற நோய்கள் தீர்ந்து விடும்.

author avatar
Parthipan K