ஒரு வாரத்தில் பித்த நோய் குணமாகனுமா?? அதற்கு இந்த ஒரு பானம் போதும்!! 

0
76

ஒரு வாரத்தில் பித்த நோய் குணமாகனுமா?? அதற்கு இந்த ஒரு பானம் போதும்!!

பித்தம் உடலில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை குறைக்கும். இந்த இரண்டு அறிகுறிகளும் உடலில் உண்டாகும் நோய்க்கு மூல காரணம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

அதனால் பித்தம் ஏற்ற இறக்கம் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதை சமநிலையில் வைத்திருந்தால் நோய்களை பெரும்பாலும் தடுக்கலாம். பித்தில் ஏற்றத்தாழ்வுகள் சில அறிகுறிகளை உணர்த்தும். அது குறித்து பார்க்கலாம்.

உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் உடலில் ஒருவித எரிச்சலை உணர்வீர்கள். சிலருக்கு உடலில் ஏதாவது ஒரு இடத்தில் திடீரென்று எரியும் உணர்வு உண்டாகும். சிலருக்கு கால்கள், உள்ளங்கைகளில் எரிச்சல் உணர்வு இருக்கும்.

சிலருக்கு எரிச்சலுடன் வலியும் இருக்கும் இவை எல்லாமே நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாக இருந்தாலும் அவை உடலில் பித்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

பித்தம் அதிகமாக இருக்கும் போது உண்டாகும் அறிகுறியில் தூக்கமின்மையும் ஒன்று. பித்தம் ஏற்றம் இறக்கம் இருக்கும் போது உண்டாகும் அறிகுறியில் தூக்கமின்மை எற்படும். வாதம் அதிகரிக்கும் போது தூக்கத்தில் சிக்கல் உண்டாகலாம்.

அடிக்கடி காய்ச்சல் வெப்பநிலை அதிகரிப்பு எதிர்கொண்டால் அது பித்தின் அறிகுறியாக இருக்கலாம்

பித்தம் இருப்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிகமான வியர்வையை கொண்டிருப்பார்கள். குறிப்பாக உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வெளிப்படும் வியர்வை ஒருவித துர்நாற்றத்தை வெளியிடக்கூடும்.

பித்த நரை என்று சொல்வதை அறிவோம். முன்கூட்டியே நரை விழுவதை பித்தநரை என்று சொல்வதுண்டு. உடலில் பித்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது முன்கூட்டிய நரையை உண்டாக்கும். இவையும் உடலில் பித்தம் வருவதற்கான அறிகுறியே ஆகும்.

பித்தம் அதிகரிக்கும் போது தோல், கண்கள், சிறுநீர் மலம் போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடலில் சிவந்து வெளிறிய தன்மை உண்டாகும். பித்தம் அதிகரிக்கும் போது காயங்கள் உண்டானால் அது அந்த இடத்தில் சீழ் அல்லது கசிவை உண்டாக்க செய்யும். பித்தம் ஏற்றம் இறக்கம் தன் மஞ்சள் காமாலையை உண்டு செய்யும்.

இந்த அறிகுறிகளை நீங்கள் தொடர்ந்து எதிர்கொண்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதன் மூலம் உடலில் பித்தத்தை சமன் செய்ய முடியும்.

இவ்வாறு பித்தத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது மற்றும் உடலில் பல பாதிப்புகளும் நிகழ்கிறது. இதனை சரி செய்ய வீட்டில் உள்ள ஒரு எளிய முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி

எலுமிச்சை பழம்

தண்ணீர்

செய்முறை

1:கொத்தமல்லி இலையை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

2:பின்பு அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

3:நறுக்கிய இந்த கொத்தமல்லி தலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

4:நன்கு அறிந்த இந்த கொத்தமல்லி சாற்றை வடிகட்டி ஒரு கிளாஸில் சேர்த்துக் கொள்ளவும்.

5:இவற்றுடன் தேவையான அளவு தண்ணீரை விட்டு கொள்ளவும்.

6:இத்துடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.

இதை நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் போதும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களிலேயே பித்தம் முழுவதும் சரியாகும்.

author avatar
Parthipan K