மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! வலுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை!!

0
56
#image_title

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! வலுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தற்பொழுது அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இவை வங்கக்கடல் பகுதிகளில் 17 ஆம் தேதி வரை நிலவக்கூடும் என்றும் அதன் பின் வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும் என்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களை பொறுத்தவரை விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.