300 அடி ஆழத்தில் விழுந்த இரண்டு நபர்களின் உயிரை காப்பற்றிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் !

0
93

கடந்த புதைக்கிழமையன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு கோர விபத்திலிருந்து இரண்டு பேரின் உயிரை ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் காப்பற்றியுள்ளது. மொபைல் எப்படி உயிரை காப்பாற்றும் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? கண்டிப்பாக ஆச்சர்யமாக தான் இருக்கும், ஆப்பிள் போனிலுள்ள ஒரு சிறந்த தொழில்நுட்பம் தான் அந்த இரண்டு பேரின் உயிரை காப்பற்றியுள்ளது. சாட்டிலைட் மற்றும் கிராஷ் கண்டறிதல் ஆகிய அம்சங்களின் மூலம் போனின் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ், மீட்புக் குழுக்கள் சரியான நேரத்தில் விபத்து நடந்த இடத்தை அடைய உதவி செய்துள்ளது. ஏஞ்சல்ஸ் வனப்பகுதி நெடுஞ்சாலையில், மலையின் ஓரத்தில் சுமார் 300 ஆதி ஆழத்தில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.iPhone 14 saves lives of 2 after they fell in deep valley: here is what  happened - India Today

அப்போது காரில் இருந்த நபர்கள் வைத்திருந்த ஐபோன் 14-ல் கிராஷ் கண்டறிதல் அம்சம் செயல்படுத்தப்பட்டது, அந்த பகுதியில் செல்லுலார் சேவை இல்லாததால் சேட்டிலைட் மூலமாக தொலைபேசியின் அவசரகால எஸ்ஓஎஸ் மூலம் மீட்பு குழுவினருக்கு தகவல் அனுப்பப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிளின் ரிலே மையங்களில் ஒன்றிற்கு சாட்டிலைட் மூலம் அவசரகால எஸ்ஓஎஸ்-ஐ அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் ரிலே மைய ஊழியர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விளக்கினர், அதன் பிறகு மாண்ட்ரோஸ் ஆராய்ச்சி மற்றும் மீட்புக் குழு விபத்து நடந்த பகுதிக்கும் சென்று ஹெலிகாப்டர் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்டது.iPhone 14's Satellite-Powered SOS, Crash Detection Feature Said to Save 2  Lives | Technology News

விபத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நபர்களுக்கு தற்போது மருத்துமனையில் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் ஐபோன் 14 வழங்கக்கூடிய இந்த பாதுகாப்பு அம்சத்தை வைஃபை அல்லது செல்லுலார் இணைப்பு இல்லாத சூழ்நிலைகளிலும் நீங்கள் பயன்படுத்திகொள்ளலாம். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் செயற்கைக்கோள் மூலம் அவசரகால எஸ்ஓஎஸ் அனுப்பும் வசதி கிடைக்கிறது.

author avatar
Savitha