இடப்பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு! சம்பந்தப்பட்ட ஜோசியர் தற்கொலை 

0
108
Allegation of money fraud to solve the problem! Involved is Josiah's suicide
Allegation of money fraud to solve the problem! Involved is Josiah's suicide

இடப்பிரச்சனையை தீர்ப்பதாக பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு! சம்பந்தப்பட்ட ஜோசியர் தற்கொலை

இந்து மக்கள் கட்சி ஜோசியர் பிரிவு மாநில துணைத்தலைவர் பிரசன்னா சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. என் தம்பியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரது சகோதரி பேட்டி.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. தொழிலதிரான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய குடும்பத்தினருக்கு செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஊரப்பாக்கத்தில் சொந்தமாக காலியிடம் உள்ளது.

இந்நிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத் தலைவருமான பிரசன்னா என்பவர் அறிமுகமானார். அவர் இடம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதனை நம்பிய கருப்பையா பிரசன்னாவிடம் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஒரு 25 லட்சத்து 59 ஆயிரம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலி கையும் பிரசன்னா வாங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

ஆனால் இடப்பிரச்சனையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் மோசடி செய்ய முயன்று உள்ளார். இதற்கு பிரசன்னாவின் மனைவி அஸ்வினி ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் பிரகாஷ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளதாக கூறி கருப்பையா இவர்கள் மீது பண மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து போலீசாரும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

இந்த நிலையில் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கோரி இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணைத் தலைவர் பிரசன்னா கோவை நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமின் அளிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை இந்த நிலையில் இந்த மோசடி புகாரால் மிகுந்த மனவேதனையில் இருந்த பிரசன்ன சாமி கடந்த மூன்றாம் தேதி அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்,

இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசன்னாவின் தாயார் கிருஷ்ணகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து பிரசன்னா மற்றும் அவருடைய மனைவி அஸ்வினி அவர்களது மகள் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தார்

இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்க ஒப்புக் கொண்டனர். மேலும் போலீசார் பிரசன்னாவின் இறப்பு மற்றும் அவருடைய தாயாரின் இறப்பு, மேலும் இந்த வழக்கு காரணமாக இருந்த அனைவரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்தனர்

இது குறித்து உயிரிழந்த பிரசன்னாவின் சகோதரி கூறுகையில், என்னுடைய தம்பி மீதும், அவருடைய குடும்பத்தின் மீதும் தவறான புகாரை அளித்துள்ளனர். அந்த புகாரால் ஏற்பட்ட மன வேதனையால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

தற்பொழுது எனது தம்பியும் உயிரிழந்து விட்டார் இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் பத்திரிகை செய்திகளில் வந்த செய்தியை பார்த்து தான் என்னுடைய தம்பி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஊடகத்தின் மீது நம்பிக்கை உள்ளது ஊடகத்தினர் தான் இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று என்னுடைய தம்பியின் உயிரிழப்பிற்கு நீதி பெற்ற தர வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்தார்

மேலும் பிரசன்னா குடும்பத்துடன் தற்கொலைக்கு பயின்ற சம்பவத்தை தொடர்ந்து செல்வபுரம் போலீசார் பிரசன்னாவின் மீது புகார் அளித்திருந்த சென்னை சேர்ந்த கருப்பையா அவரது மனைவி ரவி பிரியா மற்றும் சங்கர் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது