வரலாறு காணாத நிகழ்வு பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை

0
94
An unprecedented event has been issued by the Meteorological Department to the public!! Heavy rain is going to lash these 9 districts in the next 3 hours!
An unprecedented event has been issued by the Meteorological Department to the public!! Heavy rain is going to lash these 9 districts in the next 3 hours!

வரலாறு காணாத நிகழ்வு பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை ! 

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உட்பட 9  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் எப்பொழுதும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் கடுமையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் முடிவுற்ற போது வெயிலின் தாக்கம் சிறிது கூட குறையவில்லை.  மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு கூட பயப்படும் அளவு வெயிலின் தாக்கமானது இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் வங்கக்கடலில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று காலை முதல் நல்ல மழை பெய்து கொண்டு வருகிறது. நள்ளிரவு முதல் விடாது பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை பெய்யும் பொழுது தான் தமிழகத்தில் மழைப்பொழிவு  அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதற்கு முன்னால் சென்னையில் 1991 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக அளவு மழை பெய்தது. இதையடுத்து சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்த ஆண்டு  ஜூன் மாதத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது.

எப்போதும் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 1.6 சென்டிமீட்டர் மழை இயல்பாகப் பெய்யும். ஆனால் நேற்று ஒரே நாளில் மூன்று மடங்கு அதிக மழை பெய்துள்ளது. அதேபோல் இன்றும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஆகிய 9 மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையின் திடீர் வானிலை மாற்றம் மற்றும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுவதாவது,

** 27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

** 1991, 1996 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத அளவு மழை பெய்துள்ளது. இது இடியுடன் கூடிய மழையால் அல்ல. கடலில் இருந்து நகரும் மேகங்களிலிருந்து உருவானது ஆகும்.

** வரலாறு காணாத வெப்பத்திற்கு இது போன்ற மலையை தந்து இயற்கை ஈடு செய்கிறது. இன்னும் கடலில் இருந்து மேகமூட்டத்துடன் மழை பெய்வது என்பது கனவாக உள்ளது. 1996 க்கு பிறகு ஜூன் மாதம் பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் விடுமுறை கிடைத்துள்ளது.

** 2K குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு கடுமையான வெப்பம் மற்றும் மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு இந்த மாதம்  55 மி.மீட்டர் கிடைத்துள்ளது. சில இடங்களில் சுமார்  6 மணி நேரத்தில்  மூன்று மடங்கு மழை கிடைத்துள்ளது.