வானவெளியில் மற்றொரு பூமி விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!! 

0
37
Another earth in space!! New information revealed in the study of scientists!!
Another earth in space!! New information revealed in the study of scientists!!

வானவெளியில் மற்றொரு பூமி!! விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்!!

ஜப்பான் விஞ்ஞானிகள் பூமி போன்றே மற்றொரு கிரகத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

அதிகரித்துக் கொண்டே வரும் நவீன அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும், தற்போது ஏராளமான தகவல்களை நமக்கு தந்து கொண்டே வருகிறது. அறிஞர்கள் ஏற்கனவே தொலைநோக்கியின் மூலமும், அறிவியல் நுணுக்கங்களை கொண்டும் ஏராளமான கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ந்து இந்த ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது பூமியை போன்ற வேறு ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியாவில் உள்ள ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தின் தகாஷி இடோ என்ற இரு விஞ்ஞானிகளின் ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

பூமி போன்று ஒரு கிரகம் இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் கடைசி  கோளான  நெப்டியூனுக்கு அடுத்து  கைபர் பட்டை என அழைக்கப்படுகிறது. பனிப்பொருட்கள் நிறைந்த இடம் என கருதப்படும் இது  9-வது  கிரகத்தை விட மிக அருகில் உள்ளது.

ஏற்கனவே சூரிய குடும்பத்தில் ஆரம்பத்தில் இதுபோன்ற ஏராளமான கோள்கள் இருந்ததால் இதுவும் ஒரு ஆதி கோளாக இருக்கக்கூடும் என்று அவர்கள் நம்பி வருகின்றனர். கைபர் பெல்ட்டில் மில்லியன் கணக்கான பனிக்கட்டி பொருட்கள் இருப்பதாலும், அவை  நெப்டியூனுக்கு அப்பால் அமைந்துள்ளதாலும் அவை ட்ரான்ஸ் – நெப்டியூனியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவை சூரிய குடும்பம் உருவானதில் எஞ்சியவை.

மேலும் பாறை, உருவமற்ற கார்பன், மற்றும் நீர், மீத்தேன், போன்ற ஆவியாகும் பனிக்கட்டிகளின் கலவைகளால் ஆனது. டிரான்ஸ் நெப்டியூனியன்  பொருட்களின் சுற்றுப்பாதையானது   வெளிப்புற சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாத கிரகம் இருப்பதை குறிக்கக்கூடும்.

அது மட்டும் இல்லாமல் இந்த பாறை மற்றும் பனி உடல்கள் வெளிப்புற சூரிய மண்டலத்தில் உருவாகி இருக்கும் கிரகத்தின் எச்சங்கள். எனவே அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெரிய ஈர்ப்பு விசை இந்த பொருட்களில் ஈர்க்கப்பட்டு அவற்றுக்கு விசித்திரமான சுற்றுப்பாதைகள் வழங்குவதை ஆராய்ச்சி குழு கவனித்தது.

மேலும் இந்த கிரகமானது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களில் இருந்து வேறுபட்டது. மற்றும் மிகவும் பெரியது. அதன் காரணமாக தொலைதூர சுற்றுப்பாதையில் அமைந்துள்ளது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நெப்டியூனை விட சூரியனிலிருந்து 20 மடங்கு தூரத்தில் இந்த கோள் சுற்றி வருகிறது.

இருந்தாலும் இன்று வரை விஞ்ஞானிகள் 9 கிரகங்கள் இருப்பதாக மட்டுமே கூறி வருகின்றனர்.

விஞ்ஞானிகள் இந்த கோள் பற்றி கூறுகையில்,

சூரியன் 450 கோடி வருடங்களுக்கு முன்னால் உருவானது. சூரியன் உருவாகும்போதே அதைச் சுற்றி கொண்டிருந்த தூசுகளும், வாயுக்களும், விண்கற்களும், ஈர்ப்பு விசையின் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியதால் சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களும் அதன் துணைக்கோள்களும் உருவானது. இப்படி நடந்த மோதலில் மோதிய அனைத்து பொருட்களுமே கோள்களாக மாறவில்லை. மீதம் இருந்து அனைத்தும் விண்வெளியில் மிதந்து கொண்டிருந்தன.

 இவ்வாறு எஞ்சிய பொருட்கள் சூரிய தொகுதியில் உள்ளே சிறுகோள் பட்டை என்ற பகுதியில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன. இந்த சிறுகோள் பட்டை போன்று  நெப்டியூன் கிரகத்திற்கு அப்பாலும் காணப்படும் சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேறிய விண்கற்களின் அமைப்பே கைபர் பட்டை ஆகும்.

இந்த கைபர் பட்டையில் உள்ள மிகப்பெரிய கோளான  ப்ளூட்டோ கடந்த 1930 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும், கைபர் பட்டையை முழுமையாக விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை. ‌ ஏனெனில் ப்ளூட்டோவை போல அதில் உள்ள ஏனைய பொருட்கள் எதுவும் சூரிய ஒளியை பிரதிபலிக்கவில்லை.  தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவே கைபர் பட்டை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கைபர் பட்டையில் பூமி போன்ற ஒரு கிரகம் உள்ளது இது தொடர்பாக நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். இது எல்லோரும் கூறி வருவது போல 9-வது கிரகமல்ல. இது சூரிய குடும்பத்தில் எல்லையில் அமைந்துள்ளது என்று ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் இந்த புதிய கிரகம் சூரியனிலிருந்து சுமார் 200 வானியல் அலகு தொலைவில் உள்ளது. ஜப்பான் விஞ்ஞானிகள் கூறிய இந்த தகவல் அறிஞர்கள் புதிய கோள்களை கண்டறிய அடுத்த கட்ட தேடுதலுக்கு இந்த தகவல் மிகவும் தூண்டுகோலாக அமைந்துள்ளது.