நீங்கபோட் ஹெட்போன் யூஸ் பண்றவரா? உங்க டேட்டாக்கள் திருடப்படலாம் ஜாக்கிரதை!

0
161
#image_title

நீங்கபோட் ஹெட்போன் யூஸ் பண்றவரா? உங்க டேட்டாக்கள் திருடப்படலாம் ஜாக்கிரதை!

மலிவு விலையில் தரமான ஹெட்போன்கள், இயர்போன்கள், இயர்பாட்கள் போன்ற ஆடியோ சாதனங்களுக்கு இந்திய மதிப்பில் பெயர் பெற்ற நிறுவனம் தான் போட். வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் சுமார் 75 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் போட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது போட் ஆடியோ சாதனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி டார்க் வெப்பில் விற்பனை செய்யப்படுவதாக பிரபலமான ஃபோர்ப்ஸ் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

அதன்படி, போட் வாடிக்கையாளர்களின் தகவல்களை குறிப்பிட்ட ஒரு ஹேக்கர் திருடி அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. போட் வாடிக்கையாளர்களின் 2ஜிபி டேட்டா அந்த ஹேக்கரால் கைப்பற்றப்பட்டுள்ளதாம். இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைவிட கொடுமை என்னவென்றால் போட் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய அந்த ஹேக்கர்கள் அதனை டார்க் வெப்பில் இந்திய மதிப்பில் வெறும் 180 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. பொதுவாக போட் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்கள், மின்னஞ்சல் போன்றவை நிறுவனத்தால் சேமிக்கப்படும்.

தற்போது இதுபோன்ற தகவல்களை தான் ஹேக்கர்கள் திருடி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போது வரை போட் நிறுவனம் இதுகுறித்து எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.