பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!!

0
39

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் மிகவும் முக்கிய பங்கு வாய்ந்ததாக உள்ளது. இது நமக்கு மிகவும் ஆபத்தாக இருந்தாலும் அதிக அளவில் பொதுமக்கள் இதையே உபயோகித்து வருகின்றனர்.

இருப்பினும் பிளாஸ்டிக்கின் தேவை நமக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. அதாவது சொல்லப்போனால் நாம் தினசரி பயன்படுத்தும் பால் பாக்கெட் முதல் அனைத்துமே பிளாஸ்டிக் என்ற ஒரு வட்டத்திற்குள் தான் வருகிறது.

இது மட்டுமல்லாமல் நம் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களும் அதாவதுஅதாவது, பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் சோடா பாட்டில்கள், தட்டு, கப், உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட காது குடையும் குச்சிகள், சிகரெட் வடிகட்டிகள் போன்றவை அனைத்துமே பிளாஸ்டிக் பொருளால்தான் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வரும்இதனை மறுசுழற்சி செய்ய முடியாதது என்பதால் நமக்கு மிகவும் தீங்காக அமைகிறது.

இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தினசரி உபயோகத்திற்கு வாங்கும் பிளாஸ்டிக் பொருட்களில் நீங்கள் கவனிக்க கூடியவை என்னவென்றால்,

முதலில் நீங்கள் வாங்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பின்புறத்தில் உள்ள முக்கோண வடிவத்தில் ஒரு சிம்பல் இருக்கும். அதில் 1 முதல் 7 வரை உள்ள எண்கள் எழுதப்பட்டிருக்கும்.

அந்த ஒவ்வொரு எண்களும் எதைக் குறிக்கிறது எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

இந்த எண்கள் எதை வைத்து மதிப்பிடப்படுகிறது என்றால் அதன் உருவம் மட்டும் நச்சுத்தன்மை இவற்றை மையமாக வைத்தே குறிக்கப்பட்டுள்ளது.

  •  எண் 1 என்று எழுதப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்றால் கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில் வாட்டர் பாட்டில் போன்றெல்லாம் இவை பயன்படுத்தப்படுகிறது. என்னவென்றால் இதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • எண் 2 என்ற எழுதப்பட்ட பொருள் மிக உறுதியாகவும் அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க கூடியதாகவும் இருக்கும். இதை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த வகைகள் ஷாம்பு டிடர்ஜென்ட் போன்ற பாட்டில்களில் பயன்படுத்தப்படுகின்றது.
  • எண் 3 இந்த வகை பிளாஸ்டிக்கை எலக்ட்ரிக்கல் பைக் போன்ற எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • எண் 4 இது பொதுவாக எங்கு பயன்படுத்தப்படுகிறது என்றால் நாம் தினசரி பயன்படுத்தும் கேரி பேக் புட் ராப்பிங் உள்ளிட்ட இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானதாக இருந்தாலும் இதனை மறுசுழற்சி செய்ய முடியாது.
  • எண் 5 இது மிகவும் பாதுகாப்பானது இந்த வகை பிளாஸ்டிக்கை மருந்து பாட்டில் டயாபஸ் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • எண் 6 இது பாதுகாப்பு அற்றது இதனை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். இது மிகவும் உடையக்கூடிய தன்மை இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
  • எண் 7 இது எதையும் வகைப்படுத்தப்படாதது. இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அப்படி என்றால் இதில் எதை மிகவும் பாதுகாப்பானது என்று உங்களுக்கு கேள்வி இருக்கும் அதில் எண் 2,4,5 இவை மிகவும் பாதுகாப்பானது இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை நீங்கள் உணவு சம்பந்தப்பட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

author avatar
Parthipan K