மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்!

0
89
Arrange a wedding in the bamboo forest! Addicted student - students! The action of the parents!
Arrange a wedding in the bamboo forest! Addicted student - students! The action of the parents!

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்!

இப்பொழுதெல்லாம் இணையதளம் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டாலும், அதன் மூலம் நிறைய கூடா நட்புக்கள் மலர்வதையும் நாம் கடந்த நாட்களில் பார்த்து வருகிறோம்.

காதலிப்பது தவறு கிடையாது ஆனால் சரியான வயதில் வந்தால் பரவாயில்லை. மிக சிறிய வயதில் வெளி உலகமே தெரியாத பருவத்தில் காதல் மலர்ந்து பின் திருமணம் முடிந்தவுடனே ஏதோ ஒரு காரணத்தை கூறி பிரிய வேண்டியதாக உள்ளது.

கோவை அருகே உள்ள கண்ணப்பநகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவருடைய மகன் கோகுல் (வயது 22). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த மே மாதம் 27-ந்தேதி வீட்டை விட்டு காதல்ஜோடியினர் வெளியேறினர்.

பின்னர் அவர்கள், கோவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு தப்பி வந்தனர். இவர்களுக்கு உதவியாக 16 வயது சிறுவன், 17 வயது சிறுமி ஆகியோர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தனர்.

சிறுமி மாயமானது குறித்து, துடியலூர் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

கோகுலின் செல்போன் எண்ணை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அவருடைய செல்போன் சிக்னல்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் குறித்த விசாரணையில் போலீசார் களம் இறங்கினர்.

இதில், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரிடம் தொடர்ந்து கோகுல் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து துடியலூர் போலீசார் மற்றும் சிறுமியின் பெற்றோர் நேற்று திண்டுக்கல் விரைந்தனர்.

கோகுலின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மூங்கில் தோப்பில் அவர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

போலீசாரை கண்டதும் கோகுல், அந்த சிறுமியுடன் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டார். கோகுலுக்கு உதவுவதற்காக கோவையில் இருந்து வந்த 16 வயது சிறுவன், 17 வயது சிறுமி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 3 பேரையும் போலீசார் அங்கிருந்து மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை, திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா (26), ராமையன்பட்டியை சேர்ந்த நிக்சன் ஜெரால்டு (22), 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது.

இவர்கள் மற்றும் கோவையில் இருந்து வந்த சிறுவர், சிறுமி உள்பட 5 பேரும் காதல் ஜோடிக்கு மூங்கில் காட்டில் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிபட்ட 5 பேரிடமும் காதல்ஜோடி குறித்து கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதன் விவரங்கள்:-

 கோகுல் தனது நண்பர்களுடன் கஞ்சா மற்றும் மதுபழக்கத்திற்கு அடிமையாகி அதனை டிக்டாக் வீடியோவில் பதிவிட்டு வந்துள்ளார். அதன்மூலம் அந்த சிறுமியும் நட்புடன் பழகி பல இடங்களுக்கு பைக்கில் சுற்றி வந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டு தனது காதலியுடன்  கோகுல்ராஜ் பைக்கில் வந்துள்ளார். இவர்களுடன் மேலும் ஒரு சிறுமி மற்றும் சிறுவன் பைக்கில் வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு திண்டுக்கல்லில் உள்ள நண்பர்களை பார்க்க வந்தனர்.

பிடிபட்ட அனைவரும் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் படித்து வருபவர்கள். கொரோனா ஊரடங்கு என்பதால் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களை தேடி அவர்களுடன் வெளியிடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர். இதில் அந்த சிறுமிகளுக்கும் போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோரிடம் இருந்து மறைக்கும் வகையில் ஆன்லைன் வகுப்பு செல்வதாகவும், தனது தோழியை பார்க்க செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால் தங்கள் குழந்தைகள் போதைக்கு அடிமையான விசயத்தை பெற்றோர்கள் கவனிக்காதது எப்படி என்று போலீசார் வியப்படைந்துள்ளனர்.

பிடிபட்ட அனைவரையும் கோவையில் விசாரணை நடத்த அவர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.டிக்டாக் மோகம் மற்றும் செல்போனில் அதிகநேரம் செலவிடுவதால் மாணவர்களின் எதிர்காலம் வழிதவறி போதைக்கு அடிமையாகும் சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் வைத்திருந்த செல்போனில் புகைபிடிப்பது, மது அருந்துவது, தோழிகளுடன் நெருக்கமாக இருந்தது போன்ற புகைப்படங்களால் போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீட்டில் அளவுக்கதிமான செல்லமும் சுதந்திரமும் கொடுத்து இளவரசி  போல வளர்க்கப்படும் சிறுமிகள் தாங்கள் செய்வது தவறு என்பதை உணராமல் இது போன்று முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக கூடா நட்பில் விழுந்து தடம் மாறிச்செல்வது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

பூட்டிய அறைக்குள், செல்போனில், சமூக வலைதளத்தில் என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், எங்கு சென்று வருகிறார்கள் என்பதை கூட கவனிக்காமல் அவரது பெற்றோர் இத்தனை நாட்கள் பொறுப்பற்று இருந்துள்ளதாகவும் போலீசார் வேதனை தெரிவிக்கின்றனர்.

இவர்களுடன் தொடர்பில் உள்ள மற்ற நபர்களையும் கண்டறிந்து அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர் மூலம் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.