சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு சிறைத்தண்டனை உறுதியானால் வகிக்கும் பதவி பறிபோகுமா?

0
209
#image_title

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு சிறைத்தண்டனை உறுதியானால் வகிக்கும் பதவி பறிபோகுமா?

கடந்த 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் 1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்தார் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர் வேலூர் முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை 28 அன்று போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுவித்து வேலூர் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தாமனாக முன்வந்து இந்த வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீர் பணியிட மாற்றம் செய்யபட்டார். அதன் பின் இந்த வழக்கை இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க தொடங்கினார்.

கடந்த 19 அன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டு வேலூர் முதன்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில் இன்று அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது.

இதனால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் இன்று நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

பொன்முடிக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் அவரால் ஆறு வருடங்கள் வரை தேர்தலில் நிற்க முடியாமல் போகும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. அதுமட்டும் இன்றி அவர் தற்பொழுது வகிக்கும் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவி உடனடியாக பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.