மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

0
27
#image_title

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இலட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம்,ஆலந்தூர்,மடிப்பாக்கம்,தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தத்தால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.அதன்படி சென்னை,திருவள்ளுர், ராணிப்பேட்டை,வேலூர்,திருவண்ணாமலை,சேலம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு ஒடிஷா மாநிலத்தின் கடற்கரை பகுதிகளில் உருவாகி இருப்பதால் தமிழகத்திற்கு வெப்பச் சலன மழை பெய்யக்கூடும்.இதனால் தமிழகத்தில் காலையில் வெளியில் அடித்து மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் நேற்று இரவு அதிகபட்சமாக திருத்தனியில் 13 செ.மீ., மழையும் தாம்பரத்தில் 11 செ.மீ., மழையும் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கும் சூழல் இருப்பதால் டெங்கு,மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க சுகாதார துறை அறிவுறுத்தி இருக்கிறது.