நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

0
34
#image_title

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளவை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து.இவை டெல்லி,மும்பை,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை ரயில் போக்குவரத்து மூலம் அதிவேகத்தில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு தற்பொழுது விரிவு படுத்தி வருகிறது.ஏற்கனவே 25 வந்தே பாரத் ரயில் சேவை மக்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் புதிதாக தமிழ்நாடு,ராஜஸ்தான்,கேரளா,தெலுங்கானா, ஆந்திர பிரதேசம்,கர்நாடகா,பிகார்,மேற்கு வங்கம்,ஒடிஷா ஜார்கண்ட்,குஜராத் ஆகிய 11 மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு 9 வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதன்படி தமிழக்தின் முக்கிய மாவட்டங்களான கோவை,மதுரை உள்ளிட்டவற்றிற்கு ஏற்கனவே
வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது முதன் முறையாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலனுக்காக நெல்லை மாவட்டத்தில் புதிதாக இந்த சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது.சென்னை எழும்பூரில் தொடங்கப்படும் மதுரை வழியாக நெல்லை மாவட்டத்தை சென்று சேரும் இந்த வந்தே பாரத் ரயிலில் ஏசி இருக்கைகளுக்கு ரூ.1,665 மற்றும் எக்ஸிகியூட்டிவ் இருக்கைகளுக்கு ரூ.3,055 பயண கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயில் பெட்டிகளில் இடம்பெற்றுள்ள வசதிகள்:-

வந்தே பாரத்தின் முதல் சேவை கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டு தற்பொழுது வரை சிறப்பாக இயங்கி வருகிறது.இந்த ரயில் பெட்டிகளில் AC இருக்கை,எக்ஸிகியூட்டிவ் இருக்கை என்று இரு வகைகள் இருக்கின்றது.

செல்போன் ஜார்ஜ் செய்யும் வசதி,கை குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு சிறப்பு வசதி உருக்கப்பட்டு இருக்கிறது.அதனோடு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அவசர உதவிக்கு ஓட்டுநரை நேரடியாக தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.மொத்தம் 608 இருக்கைகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள்,ரயில் செல்லும் வழித்தடம் குறித்த விவரம்,சுத்தமான நவீன கழிப்பிட வசதி ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.ரயில் விபத்தை தடுக்கும் முக்கிய தொழில்நுட்பமான கவாச் பொருத்தப்பட்டு இருக்கிறது.இருக்கைகள் குஷன் சீட்டுடன் 360 டிகிரி திருப்பிக் கொள்ளும் வசதியைக் கொண்டிருக்கிறது.பயண நேரம் மிகவும் குறைவு என்பதால் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.