கடன் தொல்லையால் அசிஸ்டன்ட் மேனேஜர் கடலில் குதித்து தற்கொலை – போலீசார் விசாரணை

Dead

கடன் தொல்லையால் அசிஸ்டன்ட் மேனேஜர் கடலில் குதித்து தற்கொலை – போலீசார் விசாரணை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி பகுதி சார்ந்தவர் பெருமாள் மகன் முத்துசாமி (வயது 31). இவர் கடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன வருத்தத்துடன் இருந்த முத்துசாமியை அவரது உறவினர்கள் கேட்ட பொழுது ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து … Read more

கோயில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் – போலீசார் விசாரணை

Visaranai

கோயில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் – போலீசார் விசாரணை பட்டுக்கோட்டை அருகே படப்பைக்காடு கிராமத்தில் உள்ள பெரமையா கோயில் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள படப்பைக்காடு கிராமத்தில் உள்ள பெரமையா கோயில் சாமி சிலையை நேற்று இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றதாக. பாஜக, இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் உள்ளிட்ட … Read more

கொளத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 சவரன் தாலி செயின் பறிப்பு

Chain Snatching

கொளத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 சவரன் தாலி செயின் பறிப்பு சென்னை கொளத்தூர் யுனைடெட் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (50). இவரது மனைவி நாகராணி (44). குமார் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறார்.நாகராணி இல்லத்தரசியாக இருந்து வருகிறார். நேற்று மாலை 6 மணி அளவில் நாகராணி கோவிலுக்கு செல்வதற்காக கொளத்தூர் திருப்பதி நகர் நான்காவது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நாகராணி அணிந்திருந்த … Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகள்! மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகள்! மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி முதனிலை தேர்வில் குளறுபடிகள்: முதன்மை தேர்வுக்கு 1:50 விகிதத்தில் அனுமதிக்க வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம், டி.என்.பி.எஸ்.சி, நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல விடைகள் தவறாக உள்ளன. முதல் தொகுதி போட்டித் தேர்வுகளில் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

DMK MK Stalin-Latest Tamil News

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது, ” ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் … Read more

மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் இந்த கருவியை பொருத்த வேண்டும் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு 

Electricity

மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் இந்த கருவியை பொருத்த வேண்டும் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்சிடி கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மழைக் காலங்களில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு நிகழும் இந்த விபத்துகளால் அவ்வப்போது மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க மின் இணைப்பு உள்ள அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி (Residual … Read more

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்குங்கள் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், … Read more

சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து! 2 பேர் பலி

Dead

Tamil குளித்தலை அருகே கன்னிமார் பாளையம் பிரிவு சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மரம் வெட்டும் கூலி தொழிலாளி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆண்டி மகன் வடிவேல் (39), வையாபுரி மகன் சின்னதுரை (35). இவர்கள் இருவரும் மரம் வெட்டும் கூலி வேலை செய்து … Read more

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம்

Extension of the hill road from Pollachi Azhiyar to Valparai by aerial survey method

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம் பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை விரிவாக்கம் செய்ய பணி நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் , … Read more

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார்

palacode-karimangalam-kutga-container-seized

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார் ரகசிய அறை அமைத்து காரிமங்கலம் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2-டன் குட்காவை காரிமங்கலம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெங்களூர் பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் கடத்துவதாக தர்மபுரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளது. இதன் … Read more