அடம்பிடித்த பி.ஆர்.பந்தலு! முழிபிதுங்கிய அசிஸ்டன்ட்கள் கண்ணதாசன் தீர்த்து வைத்த சம்பவம்!

0
154
#image_title

காலத்தால் அழியாத கர்ணன் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த காலத்திலேயே மாபெரும் பொருட் செலவில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

 

இந்தப் படத்தை டி ஆர் பந்தலு அவர்கள் இயற்றினார் . சிவாஜி கணேசன் அசோகன், முத்துராமன் என்டிஆர் ஆகிய பல திரைப்பட நடிகர்கள் இப்படத்தில் நடித்தனர்.

 

இந்த படத்தில் பி ஆர் பந்தலு, அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் வழங்கும் அறிவுரையை படமாக்க வேண்டும் என்று நினைத்தார்.

 

இதைப் பற்றி தனது உதவி இயக்குனர்களிடம் கூறும் பொழுது, அனைவரும் திகைத்துப் போய்விட்டனர். ஏனென்றால் அது மிகப்பெரிய ஸ்லோகம். அதை நாம் காட்சியாக வைத்தால் இருபது நிமிடம் ஆகும். 20 நிமிடத்தை எப்படி படமாக்குவது ?.அதேபோல் மற்ற காட்சிகளை ஏதாவது நீக்க வேண்டி இருக்கும். அதனால் மாபெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் காட்சிகளை நீக்குவது எப்படி? என்று அனைவரும் குழம்பி போய் இருக்கிறார்கள்.

 

இதை பி ஆர் பந்தலுவிடம் உதவி இயக்குனர்கள் சொல்கிறார்கள். இந்த காட்சியை படம் எடுக்க 20 நிமிடங்களாகும். அதனால் அது கதையின் போக்கை மாற்றும். அதேபோல் மக்கள் இது போர் அடிக்கிறது என்று எழுந்து கூட சென்றுவிடலாம், என்றெல்லாம் பி ஆர் பந்தலு அவர்களிடம் சொல்கிறார்கள். ஆனால் பி ஆர் பந்தலுவோ அதை எடுக்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்.

 

அப்பொழுது விஸ்வநாதன் அவர்கள் வருகிறார்கள் . அனைவரும் குழம்பி போய் இருப்பதை கண்ட விஸ்வநாதன்

என்ன? என்று கேட்கிறார். அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசம் செய்யும் அந்த நிகழ்வை படமாக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்புகிறார், என்று சொல்ல அவ்வளவுதானே பண்ணிவிடலாம், என்று அவர் எளிமையாக சொல்கிறார்.

 

நாங்கள் அனைவரும் குழம்பி போய் இருக்கிறோம். நீங்கள் பண்ணிவிடலாம் என்று, இவ்வளவு இனிமையாக சொல்கிறீர்களே எப்படி ? என்று உதவி இயக்குனர்கள் கேட்கிறார்கள்.

 

இது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. கண்ணதாசனை கூப்பிடுங்கள் 20 நிமிடம் பாடலை அவர் மூன்று நிமிடத்தில் முடித்துக் கொடுத்து விடுவார் என்று யோசனை சொல்கிறார் விஸ்வநாதன்.

 

உடனே கண்ணதாசனை அழைத்து அந்த 20 நிமிடம் பாடலை மூன்றே நிமிடத்தில் அதனை பாமர மக்களும் புரியும் வண்ணம் எடுத்துக்காட்டி பாடலை எழுத்து கொடுத்து இருக்கிறார்.

 

“அர்ஜுனன் அப்பொழுது தன்னுடன் போர் புரிய வரும் தனது சொந்தங்களை பார்த்து பயப்படுவார். இவ்வளவு சொந்தங்களை ஒரு நாட்டிற்காக கொல்வதா ? என்று மனம் கலங்கி நிற்பார். அதனால் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் வழங்கும் உபதேசத்திற்கான பாடல் இதோ

 

“மரணத்தை எண்ணிக் கலங்கிடும்

விஜயா…

மரணத்தின் தன்மை சொல்வேன்…

மானிடர் ஆன்மா மரணமெய்தாது…

மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய்

மேனியைக் கொல்வாய்

வீரத்தில் அதுவும் ஒன்று

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி

  • வெந்துதான் தீரும் ஓர் நாள்
author avatar
Kowsalya