உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

0
79

உள்ளாட்சி தேர்தலில் திமுக-அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

தமிழகத்தில் ஒரு வழியாக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த தேர்தலுக்காக இப்பொழுதே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக, பாமக ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் தலா இரண்டு மாநகராட்சி தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சி தொகுதிகளில் சென்னை மற்றும் கோவை ஆகிய இரண்டு மாநகராட்சி தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல்கள் கசிந்துள்ளது

இதனை உறுதி செய்யும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’உள்ளாட்சி தேர்தலில் பாஜக 2 தொகுதிகளை கேட்பதாகவும் இது குறித்து கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா இரண்டு மாநகராட்சி தொகுதிகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் முக்கியமான மாநகராட்சி தொகுதிகளை குறி வைத்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்பாலான மாநகராட்சி தொகுதிகளை கைப்பற்ற ஆசையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொடங்கிவிடும் என்று தெரிகிறது

author avatar
CineDesk