உடலில் துர்நாற்றம் ஏற்படுகின்றது!!? இதோ அதை கட்டுப்படுத்த அசத்தலான 5 டிப்ஸ்!!!

0
84
#image_title

உடலில் துர்நாற்றம் ஏற்படுகின்றது!!? இதோ அதை கட்டுப்படுத்த அசத்தலான 5 டிப்ஸ்!!!

உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இயற்கையான வழிமுறையில் அசத்தலான எளிமையான 5 டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

ஒரு சிலருக்கு உடலில் கெட்ட துர்நாற்றம் ஏற்படும். முக்கால் வாசி பேருக்கு துர்நாற்றம் என்பது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் காரணமாக ஏற்படும். இன்னும் ஒரு சிலர் நீண்ட நாட்கள் குளிக்காமல் இருப்பதால் அவர்களுக்கும் உடலில் துர்நாற்றம் ஏற்படும்.

உடலில் இருந்து ஏற்படும் துர்நாற்றத்தை மறைக்க ஒரு சிலர் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அது எல்லாம் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த பதிவில் உடலில் இருந்து ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த சில எளிமையான இயற்கையான 5 டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் 5 டிப்ஸ்…

1. தினமும் இரண்டு வேலை சோப்பு பயன்படுத்தி நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இதன் காரணமாக சருமத்தில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து விடும். மேலும் வியர்வை நீக்கப்படும். இதனால் உடலில் துர்நாற்றம் ஏற்படுவது கட்டுப்படுகின்றது.

2. நன்கு காற்றோட்டமாக இருக்கும் பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளலாம்.

3. உடலில் வியர்வை ஏற்படாமல் இருக்க இருப்பதற்கு வியர்வை எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

4. அதிகம் தண்ணீரை குடிக்க வேண்டும். நாம் அதிகளவு தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் அழிந்து வெளியேறிவிடும். இதனால் உடலில் துர்நாற்றம் வீசுவது குறையும்.

5. வெங்காயம், பூண்டு போன்றவற்றை உண்பதால் உடலில் கடுமையான கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது அளவாக சாப்பிடலாம்.