நான்காவது போட்டியை வென்ற டி 20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

நான்காவது போட்டியை வென்ற டி 20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் … Read more

“இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும்…” தன் தவறு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்

“இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும்…” தன் தவறு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தனது இடத்துக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தற்போது டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் … Read more

டி 20 உலகக்கோப்பை தொடர்… சூர்யகுமார் யாதவ் இன்று உச்சத்தைத் தொட வாய்ப்பு

டி 20 உலகக்கோப்பை தொடர்… சூர்யகுமார் யாதவ் இன்று உச்சத்தைத் தொட வாய்ப்பு சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் … Read more

டி 20 உலகக்கோப்பையில் ஷமி இருப்பாரா….? பிசிசிஐ அதிகாரி தெரிவித்த கருத்து!

டி 20 உலகக்கோப்பையில் ஷமி இருப்பாரா….? பிசிசிஐ அதிகாரி தெரிவித்த கருத்து! இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில மாதங்களாக டி 20 போட்டிகளில் விளையாடுவதில்லை. டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதுதான் தற்போது பிசிசிஐக்கு இருக்கும் சிக்கலான வேலையாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 15 பேரைத் … Read more

“ஆசியக்கோப்பையில் கோலியின் இடம் மாற்றப்படலாம்…” பார்த்திவ் படேல் கருத்து

“ஆசியக்கோப்பையில் கோலியின் இடம் மாற்றப்படலாம்…” பார்த்திவ் படேல் கருத்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி ஆசியக்கோப்பையில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி … Read more

யார் சிறந்தவர்… கோலியா? ரோஹித் ஷர்மாவா?… பிசிசிஐ அதிகாரி அளித்த பதில்!

யார் சிறந்தவர்… கோலியா? ரோஹித் ஷர்மாவா?… பிசிசிஐ அதிகாரி அளித்த பதில்! இந்திய அணியின் சிறந்த வீரர்களில் இருவர்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோஹ்லியும் இந்தியாவுக்காக பல போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்திய அணியின் தற்போதைய அனுபவம் மிக்க இரண்டு சிறந்த வீரர்களாக விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்ககளாக கோலியின் பேட்டிங் முன்புபோல இல்லை. அவர் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்து வருகிறார். இது அவரின் கிரிக்கெட் … Read more

ரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா?

ரசிகர்களுக்கு குஷி செய்தி… ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐக்கிய … Read more

சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம்!

சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கும் வேல்ஸ் பல்கலைக் கழகம்! இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட உள்ளது. இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி சிறப்பான பங்களிப்பை செய்தவர் சுரேஷ் ரெய்னா. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு அணியில் இடம் கிடைக்காததால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் … Read more

சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?…. சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்!

சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?…. சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடி வருபவர் ரவீந்தர ஜடேஜா. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி … Read more

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை வீரர்கள்… அதிர்ச்சி தகவல்! இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் காமன்வெல்த் போட்டித் தொடர் தற்போது நடந்து வருகிறது.இங்கிலாந்தில் தற்போது 71 ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். இலங்கை சார்பாக 52 வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என மொத்தம் 161 பேர் இங்கிலாந்து சென்ற நிலையில் தற்போது அங்கிருந்து … Read more