தன் மீதான வழக்கை முடித்து வைப்பதற்காக அமெரிக்க நிர்வாகத்திற்கு பணம் வழங்கும் முன்னாள் அதிபர் டிரம்ப்! அடேங்கப்பா இத்தனை கோடியா?

அமெரிக்காவில் கடந்த 2017ஆம் வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்தார். இதற்கு அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது, மிகப்பெரிய ஜனநாயக மற்றும் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரு நிர்வாகத் திறமை மிக்க நபரிடம் செல்ல வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் நோக்கமாக இருக்கிறது. என்று பலரும் தெரிவித்து வந்தார்கள். அத்துடன் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் ஆட்சி … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு! கைது செய்யப்படுவாரா இம்ரான்கான்?

சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அந்த நாட்டின் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும், தீவிர போராட்டத்தில் இறங்கினார்கள். மேலும் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அந்த நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. தொடர்ந்து ஷபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக பதவியேற்றார். … Read more

ஆப்கானிஸ்தான் விரைவில் விடுதலை பெறும்! முன்னாள் ராணுவ தளபதி சூளுரை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருட காலமாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கடுமையான தாக்குதலை நடத்தி அந்த நாட்டை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அந்த விதத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்த ஆப்கானிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி … Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்! விமானியின் செயலால் நடைபெற்ற விபரீதம் 66 பேர் பலியான சோகம்!

பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கி எகிப்து நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டு வானில் சென்று கொண்டிருந்தது. நடுவானில் பாதி தூரம் சென்ற அந்த விமானம் கடலில் மேல் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. ஆகவே இந்த விமானம் எங்கு சென்றது? என்ன ஆனது? என தெரியாமல் இருந்து வந்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 66 பேரும் பலியானார்கள். கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் … Read more

உக்ரைனின் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அதிகாரிகள்! உக்ரைன் அதிபர் அதிர்ச்சி!

கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி உக்ரைன் மீது அண்டை நாடான ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது. அந்த போர் தற்போது 65 நாட்கள் கடந்து நீடித்து வருகிறது இந்த போர் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கிறார்கள். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தனர். மேலும் ஐநா சபையின் சார்பாகவும் இந்தப் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு போப் ஆண்டவரும் ரஷ்யாவிற்கு நேரடியாக சென்று போர் … Read more

ஐநா சபையின் பொதுச் செயலாளர் வருகையின்போது அதிர்ச்சி வழங்கிய ரஷ்யப் படைகள்!

ரஷ்யா சென்ற வருடமே உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு தன் நாட்டு ஏவுகணைகளையும், ராணுவ நிலைகளையும், உக்ரைன் எல்லையில் நிறுத்த தொடங்கியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இருந்தாலும் எந்தவிதமான அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து தன்னுடைய வேலைகளை செய்து வந்தது ரஷ்யா. இப்படியான நிலையில், சென்ற பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் தொடுத்தனர். இதற்கான உத்தரவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டிருந்தார் … Read more

வெள்ளை மாளிகை வெளியிட்ட புதிய தகவல்! குவாட் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜோ பைடன் சந்திப்பு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற மே மாதம் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது இதில் அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. எதிர்வரும் மே மாதம் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொள்கின்றார். இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாகி வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் … Read more

போர் என்ற பெயரில் அத்துமீறும் ரஷ்ய ராணுவம்! 16 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ரஷ்ய வீரரின் அராஜக செயல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது இதில் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இதில் உக்ரைன் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது அதே நேரம் ரஷ்யா பக்கமும் அதே பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. 2 மாத காலமாக தொடர்ந்து வரும் இந்த கடுமையான போர் எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் உலக தலைவர்கள் பலரும் ரஷ்யாவிடம் தொடர்புகொண்டு போரை நிறுத்த வேண்டும் … Read more

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்! சீன நாட்டில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் தீயாக பரவியது. தற்போது வரை தாக்கத்திலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் பல நாடுகள் பின்னடைவை சந்தித்தது. அனைத்து நாடுகளும் தற்போது தான் தொற்று பரவலில் இருந்து மக்களை காத்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சீனாவில் அடுத்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இது … Read more

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு உறுதியான நோய்த்தொற்று பரவல்! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதன் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அதோடு மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளும் இந்த நோய்த்தொற்று பரவலால் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. அதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகம் அதிலும் அமெரிக்கா இந்த நோய் தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக இருந்து வரும் கமலா ஹாரிஸுக்கு நோய்த்தொற்று பரவல் உறுதி … Read more