உக்ரைன் விவகாரம்! கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா,உக்ரைனை எந்த நேரத்திலும் ஆக்கிரமிக்க கூடும் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியிருக்கிறார். மேலும்,அவர் தெரிவித்ததாவது, ஆனாலும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்களுடைய பதிலின் அடிப்படையில் ரஷ்யாவிற்கும், அதிக ராணுவ இழப்பு உண்டாகுமென்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் தலைநகர் … Read more

ஆப்கானிஸ்தானின் அட்டூழியம்! 5 பாகிஸ்தான் வீரர்கள் படுகொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் தீவிரவாத அமைப்பான தாலிபான்கள் அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த நாட்டிற்கு உதவியாக இருந்த அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்த நாட்டில் தாலிபான்கள் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் தலைமறைவானார் அவர் ஏமனில் இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் வாசம் ஆட்சியதிகாரம் சென்றதை தொடர்ந்து அந்த நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலிருந்து பயங்கரவாதிகள் … Read more

தாய் நாட்டிற்காக எதையும் செய்வோம்! போர்வாள் தூக்கிய பச்சிளம் குழந்தைகள் மிரண்டுபோன உலக நாடுகள்!

சென்ற சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. ரஷ்ய நாட்டுப் படைகள் உக்ரைன் எல்லையில் துருப்புகள், ஆயுதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரத்த வங்கி உள்ளிட்டவற்றை அமைத்து படையெடுப்பதற்க்காக தயார் நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, போன்ற நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தற்சமயம் 15 வயது நிரம்பிய சிறுவர்கள் தற்காப்புக்காக ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் … Read more

உக்ரைன் விவகாரம் வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா! பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

உலகம் முழுவதும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய பதற்றம் உண்டாகி வருகின்றது. இந்த விவகாரம் குறித்து விவாதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்களிப்பை இந்தியா புறக்கணித்திருக்கிறது. சுமார் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதால் ரஷ்யா அந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்யும் என்ற பதற்றம் எழுந்திருக்கிறது. ரஷ்யா இந்த பதற்றத்தை தணிக்கும் பொருட்டு நேற்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற சூழ்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை … Read more

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு! ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும். ஐக்கிய … Read more

கடையில் திருட வந்தவனுடன் துணிச்சலாக சண்டையிட்ட பாட்டி!

கனடா நாட்டில் இருக்கின்ற ஒரு பல்பொருள் அங்காடியில் எலைன் கால் அவே என்ற 73 வயதான ஒரு பார்ட்டி ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் பொருட்களை திருட முயற்சித்ததாக சொல்லப்படுகிறது, எலைன் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அந்த மர்ம நபர் அவரை கீழே தள்ளி விட முயற்சி செய்தார். இதன் காரணமாக, சுதாரித்துக்கொண்ட அந்த வயதான பெண்மணி மர்ம நபரின் முகமூடியைக் கழற்றியதுடன் பொருட்களையும் கைப்பற்றியிருக்கிறார். இந்த … Read more

தீராத தலைவலியால் அவதிப் பட்ட நபர்! மருத்துவர்கள் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சென்ற 20 வருடங்களுக்கு மேலாக தலை வலி இருந்து வந்தது. இதன் காரணமாக,தலைவலி எதனால் உண்டாகிறது என்பதே தெரியாமல் ஒவ்வொரு நாளும் வலியுடன் இருந்து வந்தார் அந்த நபர். நன்றாக தூங்கி எழுந்தாலும் கூட அவருக்கு தலைவலி என்பது தொடர்ந்து கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. கடைசியாக மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அந்த நபருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய மண்டை ஓட்டில் புல்லட் … Read more

வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் அதிரடி கைது!

பாகிஸ்தானில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேரை அந்த நாட்டுப் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் கைது செய்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். லாகூரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற மியான்சன்னு பகுதியில் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் ஒரு சிலர் நடமாடுவது தெரிய வந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உள்ளூர் காவல் துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 2 … Read more

இணையத்தில் ஏற்பட்ட காதல்! நேரில் பார்க்க சென்ற காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன் அதிரடி கைது!

தற்போது யூட்யூப், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று பல சமூக வலை தளங்கள் இருக்கின்றன. ஆனாலும் அந்த சமூக வலைதளங்கள் சமூகத்தில் நல்ல விஷயத்திற்காக யாராலும் உபயோகப்படுத்த படவில்லை. மாறாக பல பாதகமான விஷயங்களுக்கு தான் இந்த சமூக வலைதளங்கள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையில்லாமல் பல அவதூறு செய்திகளை பரப்புவதும், கலவரத்தை ஏற்படுத்துவதும்தான் இந்த சமூக வலை தளத்தின் தற்போதைய வேலையாக இருந்து வருகிறது. இது மட்டுமா பல ஆண்களும், பெண்களும், சமூக வலைதளங்களில் … Read more

நோய்தொற்று தடுப்பூசி கர்ப்பம் தரிப்பதை குறைக்குமா? அமெரிக்க நிபுணர் பரபரப்பு விளக்கம்!

தற்போது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி,திருமணம் என்பது இந்த வயதில் தான் நடைபெற வேண்டும் என்பது சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு குழந்தைகளாக இருக்கும் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ திருமணம் செய்தால் அவர்கள் வாழ்வியல் சூழலை எதிர் கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்ற காரணத்தால், இந்த முடிவு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் படிப்பு ,வேலை, சம்பாத்தியம், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு திருமண வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் … Read more