சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு?!! இந்த தேதியில் அறிவிக்கப்படும்!!

0
79

தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் வழங்குவது பற்றியும், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் வெளிவந்த நிலையில், சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை எப்பொழுது வெளியிடுவார்கள் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கும்படி தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்து சமீபத்திய செய்திகளை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வமாக வலைதளமான cbse.nic.இந்த மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், சிபிஎஸ்சி 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் பின்வருவன:

சிபிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைத் தளத்திற்கு செல்லவும்.
அதில் ரிசல்ட் என்பதை கிளிக் செய்யவும் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் பக்கம் அதில் இருக்கும்.
மேலும்,பத்தாம் வகுப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள மேல்நிலைப்பள்ளி தேர்வு என்பதை தொட்டு கிளிக் செய்க.
மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பெற சீனியர் மேல்நிலைப்பள்ளி தேர்வு என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
அதனை அடுத்து, உங்களது வரிசை எண், தேர்வு மைய எண், பள்ளி மற்றும் அட்மிட் கார்டு விவரங்களை சமர்ப்பித்து கிளிக் செய்து முடித்தவுடன் உங்களது தேர்வு முடிவுகள் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து வைக்கவும்.

சிபிஎஸ்இ 10, 12 வாரிய தேர்வு 2021 முடிவுகளை தயாரிப்பதற்கான முயற்சிகளில் பள்ளிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும், பத்தாவது தேர்வு முடிவுகள் ஜூலை 20-ஆம் தேதி அறிவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இருப்பினும் அது குறித்து வேறு எந்த ஒரு செய்தியும் வரவில்லை. பத்தாம் வகுப்பு மாணவருக்கான அட்டவணைப்படுத்துதல் செயல்முறை வாரியம் இன்னும் எதுவும் இறுதி செய்யவில்லை. அதேசமயம் 12 போர்டு தேர்வு முடிவுகள் ஜூலை 31-க்குள் அறிவிக்கப்பட உள்ளது.

அனைத்து இணைந்த பள்ளிகளையும் கால அட்டவணையை கண்டிப்பாக பின்பற்றி ஜூலை 16 முதல் ஜூலை 22 வரை மதிப்பெண் வழங்கும் பணியை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை தொடர்ந்து விரைவில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு சிபிஎஸ்சி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளதை தொடர்ந்து சிபிஎஸ்சி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Jayachithra